முகப்பு /செய்தி /சென்னை / குடியரசு தின அணிவகுப்பு : பரிசை தட்டிச்சென்ற காவல்துறை.. விருது வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி

குடியரசு தின அணிவகுப்பு : பரிசை தட்டிச்சென்ற காவல்துறை.. விருது வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி

விருது பெறும் டிஜிபி சைலேந்திர பாபு

விருது பெறும் டிஜிபி சைலேந்திர பாபு

கிண்டி ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற தேநீர் விருந்தில் கலாஷேத்ரா நடனக் கலைஞர்களின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பாக செயல்பட்ட குழுவினருக்கு ஆளுநர் மாளிகையில் பரிசுகள் வழங்கப்பட்டன. கிண்டி ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற தேநீர் விருந்தில் கலாஷேத்ரா நடனக் கலைஞர்களின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் அவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. இதனைதொடர்ந்து குடியரசு தின அணிவகுப்பில், கலை நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்பட்டதாக அசோக் நகர் அரசுப்பள்ளி மாணவிகள் மற்றும் ராணி மேரி கல்லூரி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

சிறந்த அணிவகுப்புக்கான முதல் பரிசை காவல் துறை தட்டிச்சென்றது. காவல் துறை டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர் பரிசை பெற்றுக் கொண்டனர். இரண்டாவது பரிசு தீயணைப்பு துறைக்கும், மூன்றாவது பரிசு செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறைக்கும் வழங்கப்பட்டது.

First published:

Tags: CM MK Stalin, Governor, RN Ravi, Sylendra Babu