ஹோம் /நியூஸ் /சென்னை /

இந்தியாவின் ஆன்மீக தலைநகரம் தமிழ்நாடு - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

இந்தியாவின் ஆன்மீக தலைநகரம் தமிழ்நாடு - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவி

Chennai R N Ravi speech | தமிழக மக்கள் வட கிழக்கு மாநிலங்களுக்கு சென்று வர வேண்டும் - ஆர்.என்.ரவி.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

கலை மற்றும் ஆன்மிகத்தில் இந்தியாவின் தலைநகரமாக தமிழகம் விளங்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பவன் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி வளாகத்தில் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் ஆக்டேவ் எனும் நிகழ்ச்சியை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், நாட்டின் வளர்ச்சியின் அடையாளமாக வடகிழக்கு மாநிலங்கள் திகழ்வதாகக் கூறினார். வடகிழக்கு மாநிலங்கள் மிகவும் அழகானவை என குறிப்பிட்ட ஆளுநர், தமிழக மக்கள் வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்று வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, வடகிழக்கு மாநிலங்கள் என்றாலே கலவரம் நடைபெறும் ஆபத்தான இடம் என பலரும் எண்ணுவது தவறு என கூறினார். மேலும், ஆங்கிலேயரின் கண்ணோட்டத்தில் பார்த்ததாலேயே அவ்வாறு மக்கள் புரிந்துகொள்வதாக தெரிவித்தார். மேலும், கலை மற்றும் ஆன்மீகத்தில் இந்தியாவின் தலைநகரமாக தமிழகம் விளங்குவதாகவும் தெரிவித்தார்.

First published:

Tags: Chennai, RN Ravi, Tamil Nadu