முகப்பு /செய்தி /சென்னை / ரேசன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ரேசன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

மாதிரி படம்

மாதிரி படம்

Ration card | தமிழகத்தில் ரேசன் அட்டைதார்கள் பலர் அவர்களின் ரேசன் அட்டைகளில் மாற்றம் செய்ய வேண்டும் என எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ரேஷன் கார்டில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் செய்வதற்கு வசதியாக சென்னையில் வரும் 11ஆம் தேதி சிறப்பு முகாம் நடக்கிறது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, மார்ச் 2023 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் 11.03.2023 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்தகுடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்று வழங்கப்படும்.

மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Ration, Ration card, Ration Shop, Tamilnadu government