குஜராத்தை போல தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாட்டின் வரைபடத்தை வைக்கலாம் என மைலாப்பூர் திமுக எம்.எல்.ஏ வேலு கோரிக்கை விடுத்துள்ளார்.
2014 மக்களவை தேர்தலின் போது குஜராத் மாடல் என்ற சொல் அதிகமாக பேசப்பட்டது. குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்தபோது சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொண்டு குஜராத்தை முன்னணி மாநிலமாக உருவாக்கியதாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அப்போதிலிருந்தே குஜராத் மாடல் என்ற சொல் பிரபலமாக இருந்து வருகிறது.
சில நல்ல விஷயங்களை குஜராத்மாடல் கிட்ட இருந்து எடுத்துக்கலாம். BJP தவறா சொல்லுவாங்களா என்ன?
குஜராத் போல மக்கள் பிரதிநிதிகள் கூடும் சட்டமன்றத்திற்கு பெயர்பலகை தமிழ் நாட்டின் வரைபடத்தின் படத்தையும் சேர்த்து பெயர் பலகை வைக்கலாமே...@mkstalin @arivalayam @dmk_youthwing @DMKITwing pic.twitter.com/t87cNKfnVI
— Mylai Velu MLA (@mylaivelu71) January 16, 2023
இந்நிலையில் குஜராத் மாடலை குறிப்பிட்டு மைலாப்பூர் திமுக எம்.எல்.ஏ வேலு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் குஜராத் சட்டமன்றத்தின் முகப்பில் குஜராத் மாநிலத்தில் வரைபடம் பொறிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாடு சட்டமன்றத்திலும் தமிழ்நாட்டின் வரைபடத்தை வைக்கலாமே என திமுக எம்.எல்.ஏ வேலு ட்வீட் செய்திருந்தார். அதில் குஜராத் மாடலை சில விஷயங்களில் பின்பற்றலாம். பாஜகவினர் தவறு என சொல்வார்களா என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.