மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை, அப்படி திணித்தால் அதனை தமிழக பாஜக எதிர்க்கும் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக பொதுக்குழுவில் 1 மணி நேரத்திற்கு மேல் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு பாஜகவினை சுற்றி தான் இருந்தது.
இந்தி திணிப்பு என்பதை காங்கிரஸ் திணித்த போது திமுக 10 ஆண்டுகள் கூட்டணியில் தான் இருந்தது. மத்திய அரசு மூன்று மொழியை படிக்க வேண்டும் வேண்டும் என சொல்லி வருகின்றது. தமிழகம் C நிலையில் உள்ளது இந்தி கற்பதில் என தெரிவித்தார்.
தமிழகத்தில் வரும் 15ஆம் தேதி திமுக இளைஞரணி , மாணவர் அணி போராட்டம் என சொல்லி உள்ளனர். ஆனால் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இந்தி திணிப்பு இல்லை. நானும் அங்கு படித்து உள்ளேன். இந்தி திணிப்பு என்று மத்திய அரசு செய்தால் தமிழக பாஜக எதிர்க்கும் என தெரிவித்துள்ளார்.
யார் இந்து.. யார் இந்து இல்லை என்பதை கண்டுபிடிப்பது தான் ஃபேஷன் ஆக உள்ளது. பாஜக என்ற ஒரு கட்சி தமிழகத்தில் இல்லை என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன அதே திமுக தலைவர் ஸ்டாலின் தற்பொழுது பாஜகவை எதிர்க்கட்சியாக அவரே நினைக்கிறார். முதலமைச்சருக்கு இரண்டு விதமான பயம் வந்துள்ளது முதலில் அவருடைய கட்சியில் யார் என்ன செய்வார்கள் என்றும். இரண்டாவது பயம் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி இவை இரண்டும் சேர்த்து அவரின் தூக்கத்தை கெடுப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து முதலமைச்சரை தூங்க விடுங்கள் என திமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்த அவர், பாரத ஜனதா கட்சி வளரும் போது முதல்வரின் தூக்கம் இன்னும் கெடும் அதனால் தான் சொல்கிறேன் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வரை தூங்குவதற்கு வாய்ப்பு கொடுங்கள் என தெரிவித்துள்ளார்.
திமுகவின் அமைச்சர்களுக்கு ஜாதிவன்மம் இருக்கிறது அதனால் தான் ஒரு அமைச்சர் ஜாதி பெயரை வைத்து கூப்பிடுகிறார். அவர்கள் அழைக்கும் தோரணையை பார்த்தாலே தெரியும் அவர்கள் மிட்டா மிராசு ஆட்சி செய்கிறார்கள் என கூறியுள்ளார்.
செய்தியாளர்: சுரேஷ்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Annamalai, BJP, Chennai, Chennai Airport, Imposing Hindi