ஹோம் /நியூஸ் /சென்னை /

கார் சிலிண்டர் வெடிப்பு... ஜமேஷா முபினின் வாட்ஸ் அப் ஸ்டேடஸ்... அண்ணாமலை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

கார் சிலிண்டர் வெடிப்பு... ஜமேஷா முபினின் வாட்ஸ் அப் ஸ்டேடஸ்... அண்ணாமலை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

அண்ணாமலை

அண்ணாமலை

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் தமிழக அரசு நடந்த உண்மையை கூற வேண்டும் - அண்ணாமலை

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai [Madras] | Chennai | Tamil Nadu

  கோவையில் ஜமேஷா முபின் என்பவர் கார் சிலிண்டர் வெடித்து உயிரிழந்த விவகாரத்தில் அடுக்கடுக்கான அதிர்ச்சி தகவல்களை பாஜக மாநில  தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜமேஷா முபினின் உயிரிழப்பு தீவிரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்பு என உளவுத்துறை கூறியதாக தெரிவித்துள்ளார்.  ஆனால் மாநில அரசு அனைத்தையும் மறைக்கிறது, உண்மையை வெளிப்படுத்த வேண்டிய கடமை பாஜகவுக்கு உண்டு என குறிப்பிட்டார்.

  தொடர்ந்து பேசிய அவர், உயிரிழந்த ஜமேஷா முபின், கடந்த 21ஆம் தேதி அவருடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டசில்,

  என்னுடைய இறப்பு செய்தி உங்களுக்கு தெரிய வந்தால், நான் செய்த தவறை மன்னித்து விடுங்கள், எனது குற்றங்களை மறந்துவிடுங்கள், என்னுடைய இறுதி சடங்கில் பங்கேறுங்க, எனக்காக பிரார்த்தனை பண்ணுங்க என குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார்.

  இதையும் படிங்க | அண்ணா குறித்து ‘இடியட்’ என பத்ரி பேசியது தவறுதான்... அரசியல் விமர்சகர் ராமசுப்பிரமணியன் கருத்து

  இந்த ஸ்க்ரீன் ஷாட் தன்னிடம் உள்ளதாக கூறிய அவர், டிஜிபி சைலேந்திர பாபு நான் கூறியது பொய் என்று சொன்னால், இதனை வெளியிடுவேன் என கூறினார்.

  மேலும், ஜமேஷா முபீனின் வாட்ஸ்-அப் ஸ்டேடஸ் தகவல் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்-ஐ வைத்து பார்க்கும் போது, இது தற்கொலை படை தாக்குதலாக இருக்கும் என தெரிவித்த அவர், இது உண்மை என்றால் கோவை மக்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

  தமிழக அரசு நிறைய விஷயங்களை மறைப்பதாக தெரிவித்த அவர் 8 பேரை சட்டத்துக்கு புறம்பான கஸ்டடியில் போலீசார் வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். இத குறித்து டிஜிபி சைலேந்திர பாபு கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும் என கூறிய அவர், 5 பேரை எந்த பிரிவுகளில் கைது செய்தார்கள் என்ற தகவலை வெளியிடாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

  பாஜகவினர் யாரோ ஒருவர் அவதூறு பரப்பினால் 5 பக்க அறிக்கை வெளியிடும் போலீசார், இவ்வளவு பெரிய விஷயத்தில் அவர்களை எந்த பிரிவுகளில் கைது செய்துள்ளார்கள் என்பது குறித்து வெளியிடாதது  வேடிக்கை, விசித்திரம், கேவளம் என விமர்சித்தார். மேலும், அந்த கார் சென்ற அனைத்து சிசிடிவி காட்சிகளும் சேகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்த அவர், மக்களின் நலனுக்காக தமிழக அரசு உண்மையை கூற வேண்டும் என வலியுறுத்தினார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Annamalai, BJP, Chennai, Coimbatore