ஹோம் /நியூஸ் /சென்னை /

முதல்வர் ஸ்டாலினை கொஞ்சம் தூங்க விடுங்கப்பா.. திமுகவினருக்கு அண்ணாமலை அட்வைஸ்

முதல்வர் ஸ்டாலினை கொஞ்சம் தூங்க விடுங்கப்பா.. திமுகவினருக்கு அண்ணாமலை அட்வைஸ்

அண்ணாமலை

அண்ணாமலை

இந்தி திணிப்பு என்று மத்திய அரசு செய்தால் நிச்சயம் தமிழக பாஜக அதனை எதிர்க்கும் எனவும் தெரிவித்துள்ளார். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai | Chennai [Madras] | Tamil Nadu

  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தூங்க விடுங்கள் என திமுகவினருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு விமான நிலையத்தில் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  விமான நிலையத்தில்  செய்தியாளர்களை சந்தித்து பேசியவர்,  திமுக பொதுக்குழுவில் 1 மணி நேரத்திற்கு மேல் முதல்வர் முக.ஸ்டாலின் பேச்சு பாஜகவினை சுற்றி தான் இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

  இந்தி திணிப்பு என்பதை காங்கிரஸ் தான் செய்தது. அப்போது திமுக 10 ஆண்டுகள் கூட்டணியில் தான் இருந்தது. தமிழகம் இந்தி கற்பதில் C நிலையில் உள்ளது. மத்திய அரசு மூன்று மொழியை படிக்க வேண்டும் என்று தான் சொல்லி வருகின்றது .வரும் 15ஆம் தேதி திமுக இளைஞரணி , மாணவர் அணி போராட்டம் என சொல்லி உள்ளனர். ஆனால் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இந்தி திணிப்பு இல்லை. நானும் அங்கே தான் படித்துள்ளேன். அங்கு இந்தி திணிப்பு இல்லை. இந்தி திணிப்பு என்று மத்திய அரசு செய்தால் நிச்சயம் தமிழக பாஜக அதனை எதிர்க்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

  ALSO READ | பாஜக பிரமுகர் வாங்கிய லோன்.. தமிழிசை போட்டோவை ஆபாசமாக சித்தரித்து லோன் ஆப் கும்பல் அட்டூழியம்

  யார் இந்து யார் இந்து இல்லை என்பதை கண்டுபிடிப்பது தான் ஃபேஷன் ஆக உள்ளது என கூறிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தூங்கவிடுங்கள் என திமுகவினருக்கு வேண்டுகோள் வைக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Annamalai, BJP, Chennai, Chennai Airport