ஹோம் /நியூஸ் /சென்னை /

’ஒரு நாளில் ஒன்றும் ஆகாது, தாராளமா பட்டாசு வெடிங்க..’ - அண்ணாமலை சொன்ன அட்வைஸ்!

’ஒரு நாளில் ஒன்றும் ஆகாது, தாராளமா பட்டாசு வெடிங்க..’ - அண்ணாமலை சொன்ன அட்வைஸ்!

அண்ணாமலை

அண்ணாமலை

Bjp annamalai | சிவகாசி மக்கள் வாழ வேண்டும், அதனால் நிறைய பட்டாசு வாங்கி வெடிங்கள்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu | Chennai | Chennai [Madras]

  தீபாவளியன்று மக்கள் அதிகளவில் பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். பட்டாசு வெடிப்பது நமது கலாசாரம் என்றும், குழந்தைகள் அதிகளவில் பட்டாசு வெடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

  மேலும் பசுமை பட்டாசு நிறைய வெடியுங்கள். மாசுபாடு பற்றி ஒருநாள் பெரிதும் பார்க்காதீர்கள். அதெல்லாம் ஒன்றும் பிரச்சினை இல்லை. இத்தனை பேர் வண்டியில் போகிறார்கள், அதெல்லாம் ஒருநாளில் மாசுபாடு ஒன்றும் ஆகாது, பட்டாசு வெடியுங்கள் என அறிவுறுத்தினார்.

  தொடர்ந்து பேசிய அவர், சிவகாசியில் பட்டாசு தயாரிக்கும் தொழிலில் 8 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் கூறிய அவர், இந்த முறை அனைவரும் அதிகளவில் பட்டாசு வாங்கி வெடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Annamalai, BJP, Deepavali, Diwali, Fire crackers