ஹோம் /நியூஸ் /சென்னை /

அமைச்சர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

அமைச்சர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

துரைமுருகன்

துரைமுருகன்

அமைச்சர் துரைமுருகன் இரு தினங்களுக்கு முன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக  மீண்டும்  சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துரைமுருகனுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படும் துரைமுருகன் மருத்துவமனைக்கு சென்று தனது உடல்நிலையை பரிசோதித்து வந்தார்.

இதற்கிடையே அண்மையில்  உடல் நலக்குறைவு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் துரைமுருகன்  இரு தினங்களுக்கு முன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். இந்த நிலையில் மீண்டும் அனுமதி அனுதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் துரைமுருகன் உடல்நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

First published:

Tags: DMK, Durai murugan