முகப்பு /செய்தி /சென்னை / போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.. ஒப்பந்தம் கையெழுத்தானது

போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.. ஒப்பந்தம் கையெழுத்தானது

போக்குவரத்துத்துறை ஊழியர்கள் ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

போக்குவரத்துத்துறை ஊழியர்கள் ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

ஒப்பந்தத்தின் ஒருசில அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிஐடியு, ஏஐடியுசி ஆகிய தொழிற்சங்கங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில், தொமுச, சிஐடியு உள்ளிட்ட 66 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஏற்கனவே நேற்று 7 மணி நேரம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படாததால், இன்று இரண்டாவது நாளாக பேச்சுவார்த்தை நடந்தது.

இந்நிலையில், ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, இனி போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 81 மாதங்களாக நிலுவையில் உள்ள நிலையில், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் உறுதி அளித்தார். எனினும் ஒப்பந்தத்தின் ஒரு சில அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிஐடியு, ஏஐடியுசி ஆகிய தொழிற்சங்கங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக சிஐடியு மாநில தலைவர் சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு பே மேட்ரிக்ஸ் முறையில் கிடைக்கும் ஊதிய உயர்வு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி பேருந்து ஓட்டுநருக்கு ரூ.2,012, முதல் ரூ.7,981 வரை உயர்வு கிடைக்கும்.

இதையும் படிங்க: பொறியியல் படிப்பிற்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு ஒத்திவைப்பு ஏன்? - அமைச்சர் விளக்கம்

top videos

    நடத்துநர்களுக்கு ரூ.1, 965 முதல் ரூ.6,640 வரையும், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ரூ.2,096 முதல் ரூ.9,329 ரூபாய் வரை ஊதிய உயர்வு வழங்கப்படும். அலுவலக பணியாளர்களுக்கு ரூ.1,965 முதல் ரூ.6,640 ரூபாய் வரையும், தொழில்நுட்ப மேற்பார்வையாளர்களுக்கு ரூ.4,585 ரூபாய் முதல் ரூ.8,476 ரூபாய் வரையும் ஊதிய உயர்வு அளிக்கப்படும். பயணச்சீட்டு பரிசோதகர்களுக்கு ரூ.4,692 முதல் ரூ.7,916 ரூபாய் வரை ஊதியம் உயர்கிறது.

    First published:

    Tags: Transport ministry, Transport workers, Transport workers demanding salary