முகப்பு /செய்தி /சென்னை / முகத்தைப் பார்த்தாலே BC-யா? MBC-யா?  என தெரியும்... பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை ஆடியோ வெளியாகி சர்ச்சை

முகத்தைப் பார்த்தாலே BC-யா? MBC-யா?  என தெரியும்... பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை ஆடியோ வெளியாகி சர்ச்சை

பச்சையப்பன் பேராசிரியை ஆடியோ வெளியாகி சர்ச்சை

பச்சையப்பன் பேராசிரியை ஆடியோ வெளியாகி சர்ச்சை

கடந்த 2016ம் ஆண்டு அப்போதைய பச்சையப்பன் கல்லூரி முதல்வர் இவருடைய செயல்பாடுகளை குறிப்பிட்டு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பியதும்  தற்போது தெரியவந்துள்ளது

  • Last Updated :
  • Chennai, India

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் துறை தலைவராக பணியாற்றி வருபவர் அனுராதா. இவர் தனது துறை மாணவர்களிடம் தொலைபேசியில் பேசிய ஆடியோவில் சாதிய பாகுபாடுகளை ஏற்படுத்தும் விதமாக பேசியது தற்போது சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

முகத்தைப் பார்த்தாலே BC யா? MBC யா?  அல்லது SC யா?  என தெரிந்துவிடும் எனவும், நீ என்ன கம்யூனிட்டி என்பது கூட எனக்கு தெரியாது என்று கூறிவிட்டு நீ என்ன கம்யூனிட்டி என்று கேட்டு தமிழ் துறை மாணவர்களின் குறிப்பிட்ட சிலரின் பெயரை உச்சரித்து கம்யூனிட்டி குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளார். தற்போது மாணவர்கள் இடத்தில் சாதிய பாகுபாடுகளை உண்டாக்கும் நோக்கில் தமிழ் துறை தலைவர் அனுராதா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, கடந்த ஆண்டும் சாதிய பாகுபாடு ஏற்படுத்தும் நோக்கில் இதே தமிழ் துறை தலைவர் அனுராதா ஈடுபட்டதாகவும், அவருக்கு காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பா கல்லூரிக்கு பணிமாற்று செய்ததும் தற்போது தெரிய வந்துள்ளது. மேலும், நீதிமன்றத்தில் தடைபெற்று  சென்னை பச்சையப்பன் கல்லூரியிலேயே பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும், சமூக ரீதியாக பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை  அனுராதா கடந்த காலங்களிலும் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும் வகையில்  செயல்பட்டது தெரிய வந்துள்ளது.  மேலும், கடந்த 2016ம் ஆண்டு அப்போதைய பச்சையப்பன் கல்லூரி முதல்வர் இவருடைய செயல்பாடுகளை குறிப்பிட்டு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பியதும்  தற்போது தெரியவந்துள்ளது,  உடன் பணியாற்றும் பேராசிரியர்கள் சாதிய கண்ணோட்டத்துடன் இவர் நடத்திய தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது.

இதையும் வாசிக்க: இது சட்டத்துக்கு புறம்பானது.. துணை வேந்தர்கள் நியமன மசோதாவுக்கு ஆளுநர் எதிர்ப்பு

பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் இடையே சாதிரீதியான தீண்டாமையை கடைப்பிடிக்க கூடாது என நீதிமன்றங்களும் தமிழக அரசும் தெரிவித்து வரும் வேளையில், அவ்வப்போது பள்ளி கல்லூரி வளாகங்களில் இதுபோன்ற சாதி ரீதியான பாகுபாடு பார்க்கும் நிகழ்வுகள் நடந்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கல்வியாளர்கள் கருத்து:

இத்தகைய நிகழ்வுகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையேயான முரண்பாடாக மட்டுமில்லாமல் அது சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்து இருக்கின்றது. எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாத வகையில் ஆசிரியர்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது தற்போதைய காலத்தின் கட்டாயமாகும்.

நாளைய எதிர்கால தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் சாதிரீதியான தீண்டாமையை கடைபிடித்தால் அது மாணவ சமுதாயத்தை பாதித்து அது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கின்றனர் கல்வியாளர்கள். தற்போது நடந்திருக்கக் கூடிய நிகழ்வே இறுதியானதாக இருக்க வேண்டும் என்பதும் அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

கல்லூரி முதல்வர் கருத்து:

top videos

    இந்த விவகாரம் குறித்து பச்சையப்பன் கல்லூரி முதல்வர் கஸ்தூரியிடம்  விளக்கம் கேட்டபோது," வரும் திங்கட்கிழமையன்று ஒழுங்கு நடவடிக்கை குழு பேராசிரியை கஸ்தூரியிடம் விசாரணை நடத்த இருப்பதாக" தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கல்லூரி முதல்வர் கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Caste, Pachayappa's college, Scheduled caste