முகப்பு /செய்தி /சென்னை / அவமானப்படுத்திய உயர் அதிகாரி.. நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றத்தில் செந்தாமரை ஐஏஎஸ் மனு!

அவமானப்படுத்திய உயர் அதிகாரி.. நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றத்தில் செந்தாமரை ஐஏஎஸ் மனு!

உயர் நீதிமன்றம்

உயர் நீதிமன்றம்

தன்னை பணியிட மாற்றம் செய்து பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் - செந்தாமரை ஐஏஎஸ் மனு

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

தன்னை அவமானப்படுத்திய உயர் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஐ.ஏ.எஸ் அதிகாரி செந்தாமரை தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நில நிர்வாக இணை ஆணையராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி செந்தாமரையை வருவாய்த் துறைக்கு இடமாற்றம் செய்து அண்மையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணையை எதிர்த்து ஐஏஎஸ் அதிகாரி செந்தாமரை, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், நில நிர்வாக இணை ஆணையராக பதவி வகித்தபோது, கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜாய் எஸ்.ஏ.ராஜா என்பவருக்கு சொந்தமான திரையரங்கின் உரிமத்தை புதுப்பிப்பது தொடர்பான கோப்பின் மீது நடவடிக்கை எடுக்க தாமதம் செய்ததாக தன்னை உயர் அதிகாரி நாகராஜன் அவமானப்படுத்திவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் முடிவெடுக்க கால அவகாசம் தேவைப்படும் நிலையில், தனது கருத்தை கேட்க நாகராஜன் மறுத்துவிட்டதாகவும்,

இந்தப் பிரச்னை குறித்து கடந்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி தலைமைச் செயலாளரிடம் முறையிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

எனவே, தன்னை பணியிட மாற்றம் செய்து பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், நாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தீஸ், ஐஏஎஸ் அதிகாரி செந்தாமரை மனு மீது தமிழ்நாடு அரசு, பிப்ரவரி 9-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

First published:

Tags: Chennai High court, Court Case, IAS Transfer