ஹோம் /நியூஸ் /சென்னை /

ஆளுநரை அவதூறாக பேசிய விவகாரம் : பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது அவதூறு வழக்கு

ஆளுநரை அவதூறாக பேசிய விவகாரம் : பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது அவதூறு வழக்கு

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆர்.என்.ரவி

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆர்.என்.ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து, தற்போது திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள மேடைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியது சர்ச்சையானது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஆளுநரை அவதூறாக பேசிய புகாரில் திமுக கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ஆளுநர் மாளிகை சார்பில் வழக்கு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் முன்னிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து, திமுகவின் மேடைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியது சர்ச்சையானது.

இதுகுறித்து, வீடியோ ஆதாரத்துடன் ஆளுநரின் துணைச் செயலாளர் பிரசன்னா சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அதில், ஆளுநரின் மரியாதைக்கு குந்தகம் விளைவித்ததால், இந்திய தண்டனைச் சட்டம் 124-ன் கீழ் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டார்.

இந்நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது

First published:

Tags: DMK, RN Ravi