ஹோம் /நியூஸ் /சென்னை /

நுழைவுத்தேர்வில் பெயில்... மேயர் சிபாரிசில் சீட் வாங்கி படித்தேன்... மு.க.ஸ்டாலின் பள்ளி நினைவுகள்!

நுழைவுத்தேர்வில் பெயில்... மேயர் சிபாரிசில் சீட் வாங்கி படித்தேன்... மு.க.ஸ்டாலின் பள்ளி நினைவுகள்!

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

இந்த பள்ளியில் சேருகிறபோது முத்து, அழகிரி ஆகிய என்னுடைய இரண்டு சகோதரர்கள் படிக்கிறார்களே எனக்கு அட்மிஷன் சுலபமாக கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

முதலமைச்சர் ஸ்டாலின் இந்த பள்ளியில் பயின்றவர் என்பதால், அவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, பேசிய அவர்,  “சி.எம்-ஆக இங்கே வரவில்லை. நான் ஒரு ஸ்டூடண்ட்டாகத்தான், உங்களுடைய பழைய ஃபிரண்ட்-ஆகத்தான், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன்.” என்றார்.

தொடர்ந்து பேசுகையில், இந்த பள்ளியில் சேருகிறபோது முத்து, அழகிரி ஆகிய என்னுடைய இரண்டு சகோதரர்கள் படிக்கிறார்களே எனக்கு அட்மிஷன் சுலபமாக கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இங்கு நுழைவுத் தேர்வு இருக்கிறது. நான் பரீட்சையில் தேறவில்லை; பெயிலாகிவிட்டேன். சேர்க்க முடியாது என்று சொன்னார்கள். அப்போது சென்னையில் யார் மேயர் என்றால் குசேலர். அப்போதெல்லாம் மேயர் என்றால் செவர்லட் கார், அங்கி, 100 பவுன் செயின், செங்கோல், அப்போது எல்லாம் ஒரு வருடம் தான் மேயருக்கு காலம். அவர்களுக்கு வரவேற்பு, வெளிநாடு நிகழ்ச்சி, வெளிமாநில நிகழ்ச்சி, அதற்கே ஒரு வருடம் முடிந்துவிடும். அப்போது இதுதான் மேயருடைய வேலை.  ஆனால் இப்போது மேயர் வேலையெல்லாம் அப்படியில்லை. ஐந்து வருடம், மக்களோடு மக்களாக இருந்து பணி செய்தால்தான் அரசியலிலே முன்னேற முடியும். மேயராக நிலைத்திருக்க முடியும்.

இதையும் படிங்க : ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...’ பாடல் பாட ஆசையா இருக்கு - முதலமைச்சர் ஸ்டாலின் மேடையில் நெகிழ்ச்சி!

குசேலர் நீங்கள் சிபாரிசு செய்யுங்கள், நீங்கள் மேயர், அதனால் இந்த பள்ளியில் சிபாரிசு செய்தால் சீட் கிடைக்கும் என்று முரசொலி மாறன் அழைத்துக் கொண்டு வருகிறார். செவர்லெட் காரில் நான், மேயர், முரசொலி மாறன் வருகிறோம். அந்த காரை இந்த ஸ்கூலில் ஒரு குறிப்பிட்ட இடம் வரைக்கும் தான் அனுமதிப்பார்கள். உள்ளே காரே வரமுடியாது. ஆனால் மேயர் காரில் உள்ளே வந்தேன். அப்போது சௌரிராயன் தலைமையாசிரியராக இருக்கிறார். அவருடைய அறையின் பக்கத்தில் கார் நிற்கிறது. மேயரை அவர் வரவேற்று, என்னையும் அழைத்துக் கொண்டு போகிறார். எனக்கு அதற்குப்பிறகு சீட் கிடைக்கிறது. பின்னர் இந்த பள்ளியில் படித்து இன்றைக்கு இவ்வளவு பெரிய பொறுப்புக்கு வரக்கூடிய சூழ்நிலையை நினைத்து நீங்கள் எப்படி பெருமைப்படுகிறீர்களோ, அதைவிட அதிகமான அளவுக்கு பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதை சொல்லிக்கொள்கிறேன்.

நான் நினைத்துப்பார்க்கிறேன், நாம் அனைவரும் 50 ஆண்டுகளுக்குப் பிறகும் சந்தித்துக் கொள்கிறோம். மலரும் நினைவு என்று சொல்வார்களே, அதுபோல பழைய நினைவுகள் எல்லாம் வருகிறது. நான் மேயராக இருந்தபோது பங்கேற்றிருக்கிறேன், எதிர்க்கட்சியாக இருந்தபோதும் பழைய மாணவன் என்கிற முறையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன்.’ என்றார்.

First published:

Tags: CM MK Stalin, DMK