ஹோம் /நியூஸ் /சென்னை /

கிண்டி பன்னோக்கு மருத்துவமனை கட்டுமானப் பணிகள் : நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கிண்டி பன்னோக்கு மருத்துவமனை கட்டுமானப் பணிகள் : நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மு.க.ஸ்டாலின் ஆய்வு

மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மடுவின்கரையில் மழைநீர் வடிகால் பணிகளையும் பார்வையிட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டுமானப் பணிகள் மற்றும் மழை நீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய புதிய பன்னோக்கு மருத்துவமனையை சுமார் 230 கோடி ரூபாய் செலவில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பன்னோக்கு மருத்துவமனை கட்டுமான பணிகள் 2024-ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுமான பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதே போன்று, அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட ஐந்து பர்லாங் சாலை, சிட்டி லிங்க் சாலை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்தார். ஆலந்தூர் மண்டலத்தில் மனப்பாக்கம்-கெருகம்பாக்கம் இணைக்கும் உட்புறச் சாலை அமைக்கும் பணிகளையும் ஆய்வு நடத்தினார்.

மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். ஆய்வின் போது, மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

First published:

Tags: CM MK Stalin, TN Govt