முகப்பு /செய்தி /சென்னை / யூட்யூப் வீடியோ... ஏசி, எல்இடி பல்புகள் வைத்து கஞ்சா செடி வளர்த்த இளைஞர்கள்...!

யூட்யூப் வீடியோ... ஏசி, எல்இடி பல்புகள் வைத்து கஞ்சா செடி வளர்த்த இளைஞர்கள்...!

ஏசி போட்டு வீட்டில் கஞ்சா வளர்த்த 4 பேர் கைது

ஏசி போட்டு வீட்டில் கஞ்சா வளர்த்த 4 பேர் கைது

Tambaram Kanja Farm in House | யூட்யூப் பார்த்து கஞ்சா வளர்த்து லாபம் பார்த்து வந்ததும் காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tambaram, India

தாம்பரம் அடுத்த சேலையூரைச் சுற்றியுள்ள நட்சத்திர விடுதிகளில் மது விருந்துகளுக்கு முதல் தர கஞ்சா சப்ளை செய்யப்படுவதாக வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீஸாருக்கு புகார் வந்துள்ளது. அதனடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் நட்சத்திர விடுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சக்திவேல், ஷியாம் சுந்தர், நரேந்திரகுமார், மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய 4 பேர் போலீஸில் பிடிபட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கல்லூரி மாணவர் சக்திவேலின் வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து சம்பந்தப்பட்ட வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், அறைகளுக்குள் ஏசி, எல்இடி பல்புகளை வைத்து, மலைகளில் மட்டுமே வளரும் L-sd stamp வகை கஞ்சா செடிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. யூட்டியூப் பார்த்து கஞ்சா வளர்த்து லாபம் பார்த்து வந்ததும் தெரியவந்துள்ளது.

First published:

Tags: Crime News, Marijuana, Tambaram