ஹோம் /நியூஸ் /சென்னை /

’கோயிலை இடித்தால் ரத்தம் கக்கி சாகணும்..’ - பெண் சாமியார் செய்த மிளகாய் அபிஷேகத்தால் பதறி போன போலீசார்..!

’கோயிலை இடித்தால் ரத்தம் கக்கி சாகணும்..’ - பெண் சாமியார் செய்த மிளகாய் அபிஷேகத்தால் பதறி போன போலீசார்..!

மாதிரி படம்

மாதிரி படம்

Tambaram | கோயிலை இடிப்பவர்கள் மூன்று தினங்களில் ரத்தம் கக்கி சுடுகாட்டுக்கு சென்று விடவேண்டும் என அவர் வேண்டியதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tambaram | Chennai | Chennai [Madras] | Tamil Nadu

  தாம்பரம் அருகே, கோயிலை இடிக்கச் சென்ற அதிகாரிகள் ரத்தம் கக்கிச் சாக வேண்டும் என பெண் சாமியார் ஒருவர் மிளகாய் அபிஷேகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  சென்னை தாம்பரத்தை அடுத்த கொளப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள காளி கோவிலில் தினசரி பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

  மேலும் இந்த கோயிலில், பரிகாரங்கள் செய்வது, பேய் ஓட்டுவது என பல விதமான பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அக்கோவில் அமைந்துள்ள இடம் நீர்நிலை எனக் கூறி அதனை இடிக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசு அதிகாரிகள் அங்கே சென்றனர்.

  ALSO READ | தமிழகத்தில் இந்த 20 மாவட்டங்களில் கனமழை : வானிலை மையம் தகவல்

  கோயிலின் ஒரு பகுதியை இடித்தபோது அங்கிருந்த பெண் சாமியார் ஒருவர் திடீரென காளியம்மன் , நாகாத்தம்மன், வீரபத்திரன் உள்ளிட்ட சிலைகள் மீது மிளகாய்ப் பொடி கலந்த நீரில் அபிஷேகம் செய்தார்.

  கோயிலை இடிப்பவர்கள் மூன்று தினங்களில் ரத்தம் கக்கி சுடுகாட்டுக்கு சென்று விடவேண்டும் என அவர் வேண்டியதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், கோயில் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோயிலை அகற்ற கால அவகாம் வழங்கினர். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  செய்தியாளர்: சுரேஷ்

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Chennai, Tambaram