ஹோம் /நியூஸ் /சென்னை /

அரை நிர்வாணமாக செருப்பு திருடும் வடமாநில கும்பல்.. பாலீஷ் போட்டு சந்தையில் விற்பனை..!

அரை நிர்வாணமாக செருப்பு திருடும் வடமாநில கும்பல்.. பாலீஷ் போட்டு சந்தையில் விற்பனை..!

செருப்பு திருடிய ஆசாமி

செருப்பு திருடிய ஆசாமி

Tambaram slippers theft | வரிசையாக காலணிகள் காணாமல் போனதையடுத்து பொதுமக்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tambaram, India

சென்னை தாம்பரம் சேலையூர் அடுத்த மாடம்பாக்கம் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர்ந்து காலணிகள் காணாமல் போய் கொண்டிருந்ததால், அப்பகுதி மக்கள் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அதில், அரை நிர்வாண கோலத்தில் மர்மநபர் ஒருவர் படிக்கட்டுகளில் தவழ்ந்து வந்து காலணிகளை திருடி சென்றது பதிவாகியிருந்தது. இதனை தொடர்ந்து ஆதாரங்களுடன் அப்பகுதி மக்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் மர்மநபரை திவீரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், கேம்ப்ரோடு பகுதியில் உள்ள கேக் கடையில் வேலை செய்து வரும் வடமாநிலத்தை சேர்ந்த விகாஸ் குமார், ரோஹித் குமார் மற்றும் உடந்தையாக இருந்த அருள் எப்ரின் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது விசாரணை மேற்கொண்டனர். அதில், மூவரும் சேர்ந்து வீடு வீடாக காலணிகளை திருடி அதை பாலிஷ் செய்து பல்லாவரம் வார சந்தையில் விற்பனை செய்து வருவதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்த 300 ஜோடி காலணிகளை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர்: சுரேஷ், தாம்பரம்.

First published:

Tags: Chennai, Crime News, Tambaram