ஹோம் /நியூஸ் /சென்னை /

இனி ஒருத்தரும் தப்ப முடியாது... வண்டலூர் அருகே 100 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைத்த காவல்துறை!

இனி ஒருத்தரும் தப்ப முடியாது... வண்டலூர் அருகே 100 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைத்த காவல்துறை!

தாம்பரம் மாநகர காவல் ஆணையர்

தாம்பரம் மாநகர காவல் ஆணையர்

சிசிடிவி கேமாராக்களால் குற்றம் செய்பவர்களையும், விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி சென்றவர்களையும் கைது செய்ய முடியும் - மாநகர ஆணையர்

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tambaram, India

வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலத்தில் புறக்காவல் நிலையம் மற்றும் 100 சிசிடிவி கேமராக்களின் பயன்பாட்டினை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்திற்குட்பட்ட செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேங்கடமங்கலம் ஊராட்சி பொதுமக்கள் மற்றும் தாழம்பூர் காவல் ஆய்வாளர் வேலு உள்ளிட்ட போலீசார் இணைந்து வேங்கடமங்கலம் பகுதியின் பாதுகாப்பு கருதி ஒரு புறக்காவல் நிலையத்தையும் இப்பகுதியில் புதிதாக கட்டி அதனுடன் 100 சிசிடிவி கேமராக்களையும், அதில் 4 அதி நவீனமான ஏ.என்.பி.ஆர்.கேமராக்களையும் பொருத்தியுள்ளனர்.

இதனையடுத்து நேற்று புதிய புறகாவல் நிலையத்தையும், சிசிடிவி பயன்பாட்டையும் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பின்னர் சிசிடிவி காட்சிகளின் பயன்பாட்டை பார்வையிட்டார். இதில், பள்ளிக்கரணை துணை ஆணையர் ஜோஷ் தங்கையா, கேளம்பாக்கம் உதவி ஆணையர் ரவிக்குமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், வேங்கடமங்கலத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் தாழம்பூர் காவல் நிலையம் உள்ளது. இதனால் இங்குள்ள மக்கள் காவல் நிலையத்தில் புகாரளிக்க 25 நிமிடங்கள் கடந்து வர வேண்டியுள்ளது. அதனை தவிர்க்கும் விதமாக புறக்காவல் நிலைய உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு போலீசார் நிரந்தரமாக பணியமர்த்தபடுவார்கள் அவர்களிடம் புகார்களை தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.

மேலும் சிசிடிவி கேமாராக்களால் குற்றம் செய்பவர்களையும், விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி சென்றவர்களையும் கைது செய்ய உதவியாக இருக்கும் என்றும் கூறினார்.

செய்தியாளர்: ப.வினோத்கண்ணன், இசிஆர்.

First published:

Tags: CCTV, CCTV Footage, Local News, Tambaram