தாம்பரம் அருகே நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த பெண் மீது முட்டை அடித்து அவரது கழுத்தில் அணிந்திருந்த ஆறரை சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் சுதர்சன் நகர் 7வது தெருவில் வசித்து வருபவர் கவிதா (58). இவர் இன்று காலை வழக்கம் போல் கருமாரியம்மன் கோயில் தெருவில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்துள்ளார். அப்போது தனியாக நடந்து சென்ற கவிதாவை நோட்டமிட்ட மர்மநபர்கள் இருவர், இருசக்கர வாகனத்தில் சென்றபடி கவிதா மீது கோழி முட்டையை வீசியுள்ளனர். இதனால் பதறிபோன கவிதா நிலை தடுமாறியுள்ளார்.
இதனை சாதகமாக பயன்படுத்திய மர்மநபர்கள் கவிதா அசந்த நேரத்தில் அவர் கழுத்திலிருந்த 6 அரை சவரன் தங்க சங்கிலியை அறுக்க முயற்சித்துள்ளார். அப்போது கவிதா தாலி சங்கிலியை இறுக்கி பிடித்ததால் அவரை கீழே தள்ளிவிட்டு தாலி சங்கிலியை பறித்து விட்டு தப்பியோடியுள்ளனர். தொடர்ந்து கவிதாவின் அலறல் சத்தம் கேட்டு திரண்ட அக்கம்பக்கத்தினர் கவிதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் சிசிடிவி கேமரா காட்சிகள் இல்லாததால் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். மேலும், இது போன்ற சம்பவங்கள் அதிகரிப்பதாகவும், போலீசார் சிசிடிவி கேமரா பொருத்தி குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : சுரேஷ், தாம்பரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chain Snatching, Crime News, Tambaram