ஹோம் /நியூஸ் /சென்னை /

ஸ்கூல் வேனுக்காக காத்திருந்த சிறுமி மீது மோதிய கார்..பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்

ஸ்கூல் வேனுக்காக காத்திருந்த சிறுமி மீது மோதிய கார்..பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்

விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள்

விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள்

Tambaram accident | பள்ளி வேனுக்காக காத்திருந்த மாணவர்களை அதிவேகமாக சென்ற கார் ஒன்று தூக்கி வீசி சென்றது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tambaram, India

தாம்பரத்தில் அதிவேகமாக வந்த கார் மோதி பள்ளி மாணவி தூக்கி வீசப்பட்ட பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியை சேர்ந்தவர் வினோத். தனியார் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் நிதிஷா (வயது9). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல பள்ளிக்கு செல்வதற்கு  பள்ளி‌வேனுக்காக சிறுமியும் அப்பகுதியை சேர்ந்த   மாணவர்களும் காத்திருந்தனர்.

அப்போது, அப்பகுதியில் கருப்பு நிற கார் ஒன்று சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக வந்துள்ளது. இதனை கண்ட மாணவர்கள் காரை கண்டு பயந்து  ஓடி சென்றனர். இருந்த போதும் அந்த கார் நிதிக்ஷா மீது மோதியது. இதில் சிறுமி தூக்கி வீசப்பட்டார். தொடர்ந்து கார் அப்பகுதியில் நிற்காமல் வேகமாக  சென்றுள்ளது.

இதனைக்கண்ட மற்ற மாணவர்கள் பதறினர். அப்பகுதியில் இருந்த மக்கள் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதிவேகமாக வந்த கார் சிறுமி மீது மோதும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் அப்பகுதியில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனைக்கைப்பற்றிய போலீஸார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விபத்து ஏற்படுத்தி சென்ற காரையும் அதன் உரிமையாளரையும் தேடி வருகின்றனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

செய்தியாளர் : சுரேஷ் 

First published:

Tags: Accident, CCTV Footage, Local News, Tambaram