முகப்பு /செய்தி /சென்னை / சென்னை செஸ் ஒலிம்பியாட்டில் தாலிபான்கள் கொடியால் சர்ச்சை

சென்னை செஸ் ஒலிம்பியாட்டில் தாலிபான்கள் கொடியால் சர்ச்சை

செஸ் ஒலிம்பியாட்டில் தாலிபான் கொடி சர்ச்சை

செஸ் ஒலிம்பியாட்டில் தாலிபான் கொடி சர்ச்சை

சென்னை செஸ் ஒலிம்பியாட்டில் தாலிபான் கொடி வைக்கப்பட்டிருந்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது தற்போது அகற்றப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சென்னையில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த வீரர்களும் பங்கேற்றுள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்தாண்டு அமெரிக்க படையினர் வெளியேறிய நிலையில், அங்கிருந்த ஜனநாயக அரசு கவிழ்ந்து தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இந்த சூழலில் தாலிபான் அரசு அந்நாட்டிற்கு புதிய கொடி ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது.

சென்னை செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் அரங்கின் முகப்பில், போட்டியில் பங்கேற்றுள்ள அனைத்து நாடுகளின் கொடிகள் அடங்கிய வரவேற்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரங்கிற்கு செல்லக்கூடிய சாலையின் இரு புறத்திலும் அனைத்து நாடுகளின் கொடிகளும் நடப்பட்டுள்ளது. இந்நிலையில், முகப்பு பகுதியில் உள்ள பேனரில் ஆப்கான் நாட்டை குறிக்கும் கொடி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது தாலிபான் அரசின் கொடியாகும்.

இதையும் படிங்க: போதுமான உணவு.. மருத்துவ வசதி எல்லாம் இருக்கா - முதல்வர் ஸ்டாலின் நிவாரண முகாம்களில் உள்ள மக்களிடம் விசாரிப்பு

இந்தியா தற்போது வரை தாலிபான் இடைக்கால அரசை அங்கீகரிக்கவில்லை. எனவே, இந்த விளையாட்டு அரங்கில் தாலிபான் கொடிகள் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அவை நீக்கப்பட்டது. பேனரில் இருந்த கொடியின் மீதும் பேப்பர் ஒட்டி மறைக்கப்பட்டது. அதேவேளை, அரங்கின் உள்ள ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் தங்கள் பழைய மூவர்ண கொடியின் கீழ் விளையாடி வருகின்றனர்.

First published:

Tags: Chess Olympiad 2022, Taliban