முகப்பு /செய்தி /சென்னை / சூப்பராக மாறும் சென்னை திநகர்... விரைவில் திறக்கப்படும் சூப்பர் நடை மேம்பாலம்.. விவரம் சொன்ன சென்னை மாநகராட்சி!

சூப்பராக மாறும் சென்னை திநகர்... விரைவில் திறக்கப்படும் சூப்பர் நடை மேம்பாலம்.. விவரம் சொன்ன சென்னை மாநகராட்சி!

தியாகராய நகர் மேம்பாலம்

தியாகராய நகர் மேம்பாலம்

இந்த மேம்பால பணிகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு நடை மேம்பாலம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை தியாகராய நகரில் அமைக்கப்பட்டு வரும் ஆகாய நடைமேம்பாலம் ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தியாகராய நகர் பேருந்து நிலையத்தில் இருந்து மாம்பலம் ரயில் நிலையத்திற்கு நெரிசலின்றி மக்கள் பயணிக்க 26 கோடி ரூபாய் செலவில் ஆகாய நடைமேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில், பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது ரயில்வே நிலையம் அருகில் மின் தூக்கி அமைக்கும் பணி, ஒப்பனை அறைகள் அமைக்கும் பணி போன்றவை நடைபெற்று வருவதாகவும் இந்த பணிகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு நடை மேம்பாலம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த மேம்பாலம் வந்தால் கூட்ட நெரிசலின்றி நடப்பது மட்டுமின்றி பரபரப்பான திநகரை கண்டுகளிக்கவும் முடியும்.

இதேபோன்று திரு.வி.க நகர் மண்டலத்திற்கு உட்பட்ட ஸ்டீபன்சன் சாலையில் 43 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு வரும் உயர்மட்டப் பாலம் மற்றும் அண்ணாநகர் மண்டலத்திற்குபட்ட வில்லிவாக்கத்தில் சுமார் 62 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் ரயில்வே மேம்பால பணிகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

First published:

Tags: Chennai, Chennai corporation