Home /News /chennai /

நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் தமிழில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - டி.ஜி.பி. சைலேந்திரபாபு

நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் தமிழில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - டி.ஜி.பி. சைலேந்திரபாபு

சைலேந்திரபாபு

சைலேந்திரபாபு

Sylendra Babu : தாய் மொழியான தமிழ் மொழியில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து இருப்பதாக டி.ஜி.பி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

    சென்னை குருநானக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய டி.ஜி.பி. சைலேந்திரபாபு, நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் தமிழில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறினார்.

    தமிழக காவல்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களின் வாரிசுகள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு உயர்கல்வி குறித்த ஆலோசனை கருத்தரங்கம் சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் நடைபெற்றது.

    இதில் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, தனக்கு மருத்துவம் படிப்பதில் ஆர்வம் இருந்ததாகவும், தற்போதைய நீட்தேர்வு போன்று அப்போது நடைபெற்ற நேர்முகத் தேர்வில் தோல்வியடைந்ததால் தனக்கு மருத்துவம் கற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், உயர் படிப்புகளுக்கு செல்ல நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்காக மொழிப்பாடமான தமிழை தவிர்த்து மற்ற பாடங்களுக்கு மாணவர்கள் அதிக கவனம் செலுத்தி படிக்கின்றனர். இதனால், தாய் மொழியான தமிழ் மொழியில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து இருப்பதாக கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனால், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ் கற்றுத்தருவதற்கான டியூஷன் மையங்கள் சென்னையில் அதிகரிக்கும் நிலை உண்டாகும் என கூறிய அவர், மாணவர்கள் கற்றலில் ஆர்வம் செலுத்தி படித்து வந்தால் எந்த படிப்பை படித்தாலும் திறமையான ஆற்றலை வளர்த்துக் கொண்டு மிக மிக உயர்ந்த ஊதியத்தில், பெரிய நிறுவனங்களில் பணி வாய்ப்புகளை பெற முடியும் என்று கூறி மாணவர்களை உற்சாகமூட்டினார்.

    Must Read : கரூர் அருகே 6 ஆண்டுக்குப் பிறகு நடந்த எருது ஓட்டம்... சீறிப்பாய்ந்த நாட்டு மாடுகள்!

    இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினர்.

    செய்தியாளர் - ப.வினோத்கண்ணன்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Entrance Exam, Neet Exam, Sylendra Babu

    அடுத்த செய்தி