திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த வீராபுரத்தை சேர்ந்த 9 வயது சிறுமி டான்யா அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். முதலில் சாதாரண ரத்தக்கட்டு என நினைத்த பெற்றோர், அவரை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளித்தும் பாதிப்பு குறையவில்லை. இதனையடுத்து பல மருத்துவமணையில் டானியா-வுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல டானியாவின் முகம், வலது கண், கண்ணம், தாடை, உதடு என ஒரு பக்கம் முழுவதும் சிதையத் தொடங்கியது.
இது குறித்த சிறப்பு செய்தித்தொகுப்பு நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் வெளியான நிலையில், அதன் எதிரொலியாக திருவள்ளூர் ஆட்சியர் மற்றும் மருத்துவர்கள் குழந்தைக்கு பரிசோதனை மேற்கொண்டனர். அதன் பிறகு, சிறுமிக்கு சிகிச்சை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனையடுத்து தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவமனையில் சிறுமி டான்யா அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவருக்கு இன்று ஓட்டுருப்பு அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. ஜெர்மன் நாட்டு மருத்துவ வல்லுநர்கள் 2 பேர் அடங்கிய 10 பேர் கொண்ட மருத்துவ குழு அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.
Also see... அரசு பேருந்தில் இருந்து தவறிவிழந்த நடத்துநர் உயிரிழப்பு
8 மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெறும் நிலையில், அமைச்சர் நாசர், ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோர் மருத்துவமனையில் கண்காணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Avadi, Chennai, Child Care, Treatment