ஹோம் /நியூஸ் /சென்னை /

பக்கத்து வீட்டுக்காரர் உடன் தொடர்பா? பெண் தற்கொலையில் திடீர் திருப்பம்- நாடகமாடிய கணவரிடம் விசாரணை

பக்கத்து வீட்டுக்காரர் உடன் தொடர்பா? பெண் தற்கொலையில் திடீர் திருப்பம்- நாடகமாடிய கணவரிடம் விசாரணை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Chennai | பெண் சாவில் திடீர் திருப்பம் பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. மேலும்  நாடகமாடிய கணவரிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

திரு.வி.க. நகரில் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திடீர் திருப்பமாக அவர், பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.

சென்னை ஓட்டேரி செல்லப்பா தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவருடைய மனைவி கவிதா (வயது 36). இவர், கடந்த செப்டம்பர் மாதம் 24-ந்தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கவிதாவுக்கு கர்ப்பப்பையில் கட்டி வந்து அதற்கான சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில்  அவர் வயிற்று வலியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது கணவர் கூறினார். ஓட்டேரி போலீசார் அவரது உடலை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை செய்யும் போது கவிதாவின் ஜாக்கெட்டில் ஒரு கடிதம் இருப்பதை டாக்டர் வினோத் பார்த்துள்ளார்.

அதில் தனது சாவுக்கு வீட்டருகே வசிப்பவர் மற்றும் அவரது உறவினர்கள் காரணம் என்று எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கவிதாவின் சொந்த ஊரான ஏலகிரியில் அவரது உடலை அடக்கம் செய்துவிட்டு 15 நாட்கள் கழித்து பாலசுப்ரமணி சென்னை வந்தார்.

ஓட்டேரி போலீசார் அவரிடம் விசாரணை செய்ததில் ரஞ்சித்துடன் கவிதாவுக்கு தொடர்பு இருந்ததாகவும், அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தால் கவிதா தாக்கப்பட்டதால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிய வந்தது.

இதையும் படிங்க: கடனை செலுத்தாததால் வீட்டை ஜப்தி செய்ய வந்த அதிகாரிகள்: ஒரு மணி நேரத்தில் லாட்டரியில் ரூ.70 லட்சம் விழுந்து வங்கி அதிகாரிகளை கெஞ்ச வைத்த சம்பவம்...

ஆனால் வெளியே சொன்னால் அவமானம் என நினைத்து வயிற்று வலியால் தற்கொலை செய்து கொண்டதாக கூறியதும் தெரியவந்தது. இதுபற்றி ஓட்டேரி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Chennai, Crime News, Murder case