தேர்வை மட்டுமல்ல வாழ்க்கையையும் எப்படி எதிர்கொள்வது? என்று பிரதமர் மோடி எழுதிய புத்தகம் மாணவர்களுக்கு உதவும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், பிரதமர் நரேந்திர மோடி எழுதிய "Exam Warriors" புத்தகத்தின் தமிழாக்கமான "தேர்வு வீரர்கள்" புத்தகத்தை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டார். முதல் பிரதியை சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, நம்நாடு பதவியில் இருப்பவர்களால் ஆளப்படுவதில்லை என்றும், மாணவர்களாளேயே ஆளப்படுவதாக கூறினார். கடினமான சூழ்நிலைகளை கடந்து வந்துள்ள, வித்தியாசமான மனிதரான பிரதமர் மோடி எழுதிய இந்த புத்தகம், மாணவர்களின் வாழ்வின் வளர்ச்சிக்கு உதவும் என்றார்.
மாணவர்களில் சிலர் தேர்வு பயத்தில் பதற்றம், மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயல்வதாக வேதனை தெரிவித்த அவர், தேர்வு இறுதி முடிவு இல்லை என அறிவுறுத்தினார். தேர்வின் போது தேர்வு தாளை பார்த்தது புன்னகை செய்யும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IIT Chennai, PM Modi, RN Ravi