Home /News /chennai /

மாணவர்கள் வேலைக்கு செல்வதைவிட தொழில்முனைவோராக மாறி பலருக்கு வேலை கொடுக்க வேண்டும் - நிர்மலா சீதாராமன் அட்வைஸ்!

மாணவர்கள் வேலைக்கு செல்வதைவிட தொழில்முனைவோராக மாறி பலருக்கு வேலை கொடுக்க வேண்டும் - நிர்மலா சீதாராமன் அட்வைஸ்!

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

உலகளாவிய அளவில் தலைசிறந்த 58 நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இந்தியர்களே இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
2028-ல் சீனாவை விட, இந்தியாவில் இளைஞர்கள் அதிகம் இருப்பார்கள் எனவும் இந்தியா வளர்ச்சியை நோக்கிய பாதையில் சரியாக சென்றுகொண்டிருக்கிறது எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார்.

சென்னை காஞ்சிபுரம் மாவட்டம் மேலக்கோட்டையூரில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பம் , வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் (IIITDM) 10வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பங்கேற்று 380 மாணவர்களுக்கு பட்டமளித்தார். அதில் சிறப்புரையாற்றிய அவர், IIITDM தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனம் எனவும், கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த மாணவர்களை உருவாக்கியுள்ளது எனவும் தெரிவித்தார்.

இந்தியா வளர்ச்சியை நோக்கிய சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என கூறினார். மேலும் 2028-ல் சீனாவை விட, இந்தியாவில் உழைக்கும் வர்க்கத்தினர் மற்றும் இளைஞர்கள் அதிகம் இருப்பார்கள் எனவும் இது இந்தியாவின் மிகப்பெரிய பலமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இதையும் வாசிக்க: 12ஆவது உலக தமிழ் மாநாடு திருச்சியில் நடைபெறுகிறதா?

தொடர்ந்து பேசிய அவர், உலகளாவிய அளவில் தலைசிறந்த 58 நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இந்தியர்களே இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். வரும் காலங்களில் இதே நிலை தொடர மாணவர்கள் தங்கள் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் மாணவர்கள் மற்ற நிறுவனங்களில் வேலை செய்வதை விட தொழில் முனைவோர்களாக மாறி பலருக்கு வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் என ஆலோசனை கூறினார். மாணவர்களை உயர்க்கல்வி பயில அனுப்பும் பெற்றோர்களுக்கு தலை வணங்குவதாக தெரிவித்த அவர், விழாவில் தங்க பதக்கம் வென்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Chennai, Entrepreneurship, FINANCE MINISTER NIRMALA SITHARAMAN

அடுத்த செய்தி