ஹோம் /நியூஸ் /சென்னை /

வாட்ஸ் அப் வீடியோகால்.. மாணவியை நிர்வாணமாக வரச்சொன்ன இளைஞர்.. தேடிப்பிடித்து கைது செய்த போலீஸ்!

வாட்ஸ் அப் வீடியோகால்.. மாணவியை நிர்வாணமாக வரச்சொன்ன இளைஞர்.. தேடிப்பிடித்து கைது செய்த போலீஸ்!

வீடியோ கால்

வீடியோ கால்

இருவரும் வாட்ஸ்அப் மூலமாக குறுஞ்செய்தி மற்றும் வீடியோ கால் செய்து பேசி வந்ததாக தெரிகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

கல்லூரி மாணவியிடம் வீடியோ காலில் ஆடையை கழற்றச் சொல்லி பேசிய மாணவனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை திருவொற்றியூர் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் பாரிமுனையில் உள்ள ஒரு தனியார் மகளிர் கலை கல்லூரியில் 2ம் ஆண்டு வரலாறு படித்து வருகின்றார்.

இவரும் ஆர். கே. நகர் அரசு கலைக் கல்லூரியில் பி ஏ படித்து வரும் திருவொற்றியூர் எஸ். பி கோயில் 1வது தெருவை சேர்ந்த பரத் (19) என்பவரும் நண்பராக பழகி வந்தனர். நண்பர்கள் இருவரும் வாட்ஸ்அப் மூலமாக குறுஞ்செய்தி மற்றும் வீடியோ கால் செய்து பேசி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் 15ஆம் தேதி இரவு கல்லூரி மாணவன் வீடியோ கால் செய்து மாணவியிடம் ஆடையை கழட்டுமாறு ஆபாசமாக பேசியதாக அந்தப் பெண் திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கல்லூரி மாணவியிடம் வீடியோ காலில் ஆடையை கழற்றச்சொல்லி பேசிய அரசு கலைக் கல்லூரி மாணவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

First published:

Tags: Chennai, Crime News, Video calls