முகப்பு /செய்தி /சென்னை / EXCLUSIVE: "அருந்ததியர்கள் பற்றி உண்மையைத்தான் பேசினேன்... வரலாற்று ஆவணங்களை காட்ட தயார்.." - சீமான் பேட்டி

EXCLUSIVE: "அருந்ததியர்கள் பற்றி உண்மையைத்தான் பேசினேன்... வரலாற்று ஆவணங்களை காட்ட தயார்.." - சீமான் பேட்டி

சீமான்

சீமான்

வங்கக்கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டால் அதனை இடிப்பதில் உறுதியாக இருக்கிறேன் - சீமான்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

அருந்ததியர் சமூக மக்கள் குறித்து இல்லாததை பேசவில்லை எனவும் மராத்திய மன்னர் காலத்தில் இங்கு வந்தவர்கள் என்பது வரலாறு எனவும் நியூஸ்18 தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

அருந்ததியர் சமூக மக்கள் தூய்மைப் பணிக்காக ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர் என ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாகத் தெரிகிறது. சீமானின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. பல்வேறு அரசியல் அமைப்பினர் சீமானின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இது தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், “அருந்ததியின மக்கள் குறித்து வரலாற்றுத் தகவல்களையே பேசினேன். மராத்திய மன்னர்கள் ஆண்டபோது இங்கு வந்தனர் என்பது வரலாறு. வரலாற்று ஆதாரங்களை கூட காட்ட தயார். இதில் அவர்கள் கோபித்துக்கொள்ள ஒன்றுமில்லை. அருந்ததிய மக்கள் மீது எனக்கு பேரன்பு உள்ளது. திமுக தனது வாக்குவங்கி போய்விடும் என அருந்திய அமைப்பினரை தூண்டி விட்டு இந்த சர்ச்சையை கிளப்பியுள்ளனர்” என தெரிவித்தார்.

' isDesktop="true" id="896003" youtubeid="SuX-WXb59ns" category="chennai">

இதனை தொடர்ந்து கருணாநிதியின் பேனா சிலை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “வங்கக்கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டால் அதனை இடிப்பதில் உறுதியாக இருக்கிறேன். ஜெயலலிதா கண்ணகி சிலையையும் சீரணி அரங்கத்தையும் இடித்தது போல், கருணாநிதியின் சிலையை கடல் ஆக்கிரமிப்பு என கூறி இடிப்பேன்” என கூறினார்.

First published:

Tags: Karunanidhi's memorial, Naam Tamilar katchi, Seeman