Home /News /chennai /

சென்னையில் ரூ.700 கட்டணத்தில் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா - தமிழக அரசு ஏற்பாடு

சென்னையில் ரூ.700 கட்டணத்தில் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா - தமிழக அரசு ஏற்பாடு

அம்மன்

அம்மன்

Chennai : ஆன்மிக பயணிகள் பயன்பெறும் வகையில் 700 ரூபாய் கட்டணத்தில் சென்னையில் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலாவிற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணைந்து ஆன்மிக பயணிகள் பயன்பெறும் வகையில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்திபெற்ற அம்மன் கோயில்களை தரிசனம் செய்யும் வகையில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா கடந்த 17ம் தேதி முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.

    ஆடி அம்மன் சுற்றுலா 1 ல் சென்னை திருவல்லிகேணி சுற்றுலா வளாகத்திலிருந்து புறப்பட்டு காளிகாம்பாள் கோயில், பாரிமுனை அங்காள பரமேஸ்வரி கோயில், ராயபுரம் வடிவுடையம்மன் கோயில், திருவொற்றியூர் பவானி அம்மன் கோயில், பெரியபாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், புட்லூர்-திருவுடையம்மன் கோயில், திருமுல்லைவாயல் பச்சையம்மன் கோயில், திருமுல்லைவாயல் செய்யாத்தம்மன் கோயில், கொரட்டூர் பாலியம்மன் கோயில், வில்லிவாக்கம் ஆகிய கோயில்களை கண்டு தரிசனம் செய்து வரும் வகையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவிற்கான கட்டணம் ரூ.900 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஆடி அம்மன் சுற்றுலா 2 - ல் சென்னை திருவல்லிக்கேணி சுற்றுலா வளாகத்திலிருந்து புறப்பட்டு கற்பகாம்பாள் கோயில், மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோயில், மயிலாப்பூர் கோலவிழியம்மன் கோயில், மயிலாப்பூர் ஆலயம்மன் கோயில், தேனாம்பேட்டை முப்பாத்தம்மன் கோயில், தி.நகர் பிடாரி இளங்காளி அம்மன் கோயில், சைதாப்பேட்டை அஷ்டலெஷ்மி கோயில், பெசன்ட் நகர் காமாட்சி அம்மன் கோயில், மாங்காடு தேவி கருமாரியம்மன் கோயில், திருவேற்காடு பாதாள பொன்னியம்மன் கோயில், கீழ்ப்பாக்கம் கோயில்களை கண்டு தரிசனம் செய்து வரும் வகையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த சுற்றுலாவில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு, அனைத்து கோயில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு விரைவு தரிசன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாவிற்கான கட்டணமாக 700 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் ஆன்மிக அன்பர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    Must Read : ஆடி முதல் வெள்ளியும், அள்ளிக் கொடுக்கும் குலதெய்வ வழிபாடும்.!

    இந்த சுற்றுலாவிற்கு www.ttdconline.com என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 044-25333333, 044-25333444 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Aadi, Chennai, Temple

    அடுத்த செய்தி