ஹோம் /நியூஸ் /சென்னை /

இனி பாதங்கள் கடல்தொடும்.. மெரினாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு பாதை!

இனி பாதங்கள் கடல்தொடும்.. மெரினாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு பாதை!

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை

Chennai marina beach | மாற்றுத்திறனாளிகளை கொண்டு செல்வதற்காக மெரினா கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai | Tamil Nadu

மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதையை இன்று மாலை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

சென்னை மெரினா கடற்கரையில் தினசரி ஏராளமானோர் சென்று வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அலையை ரசிக்க ஓடோடி வருகின்றனர்.

இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை கண்டுகளிக்க முடியவில்லை என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். கடற்கரை மணலில் சக்கர நாற்காலியை இயக்க முடியாததால் அவர்களுக்கு இது எட்டாக்கனியாகவே இருந்தது.

இந்த தடையை உடைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு மெரினா கடற்கரையில் சிறப்பு பாதை அமைத்து தரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதையும் படிங்க | "தி லிட்டில் மார்க்கெட்".. பெருமூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சைக்காக குழந்தைகள் அமைத்த ஸ்டால்..

அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை ரசிக்க தற்காலிக பாதை அமைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அவர்களுக்கான நிரந்தர பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பாதையை இன்று மாலை திமுக இளைஞரணி செயலாளர் திறந்து வைக்கிறார்.

மாற்றுத்திறனாளிகளை கொண்டு செல்வதற்காக 5 சிறப்பு மூன்று சக்கர வாகனமும் 15 சாதாரண மூன்று சக்கர வாகனமும் மாநகராட்சி சார்பில் இந்த இடத்தில் உள்ளது.

First published:

Tags: Chennai, Marina Beach, Udhayanidhi Stalin, Udhayanithi Satlin