Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /சென்னை /

பொங்கலுக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகள் கவனத்துக்கு.. 6 பேருந்து நிறுத்தங்களை அடைய இணைப்பு பேருந்துகள் இயக்கம்

பொங்கலுக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகள் கவனத்துக்கு.. 6 பேருந்து நிறுத்தங்களை அடைய இணைப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை சிறப்பு பேருந்துகள்

சென்னை சிறப்பு பேருந்துகள்

வெளியூர் செல்வோருக்கு கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம் மெப்ஸ் மற்றும் ரெயில் நிலையம், கே. கே.நகர் ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

தமிழகத்தில் வரும் 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரயில்களின் டிக்கெட் விற்று தீர்ந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக போக்குவரத்து கழகம் சார்பில், பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 12, 13, 14 ஆகிய 3 நாட்களுக்கு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கத்திற்காக சென்னையில் 6 இடங்களில் தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது. பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் 6 பேருந்து நிலையங்களுக்கு பயணிகள் செல்ல 340 சிறப்பு மாநகராட்சி பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு, அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் வெளியூர்களுக்கு கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம் மெப்ஸ் மற்றும் ரெயில் நிலையம், கே. கே.நகர் ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து 12ஆம் தேதி (இன்று) முதல் 14-ந்தேதி (சனிக்கிழமை) வரை 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.இந்த பேருந்து நிலையங்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு போக்குவரத்து நெரிசலின்றி செல்லும் வகையில், பயணிகளின் வசதிக்காக 340 சிறப்பு இணை மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அந்தவகையில் கோயம்பேடு பேருந்து நிலையங்களுக்கு 127 பேருந்துகளும், தாம்பரம் பேருந்து நிலையத்துக்கு 115 பேருந்துகளும், பூந்தமல்லி பேருந்து நிலையத்துக்கு 57 பேருந்துகளும், கே.கே.நகர் பேருந்து நிலையத்துக்கு 8 பேருந்துகளும், மாதவரம் பேருந்து நிலையத்துக்கு 26 பேருந்துகளும், பாரிமுனை பேருந்து நிலையத்துக்கு 7 பேருந்துகளும் என மொத்தம் 340 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பொங்கல் திருநாளை முடிந்து, சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மற்றும் 18-ந்தேதி (புதன்கிழமை) மாலை மற்றும் இரவு நேரத்தில் 50 பேருந்துகளும், 19-ந்தேதி அதிகாலை 125 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர் அ. அன்பு ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Govt Bus, Pongal, Pongal festival, Special buses