ஹோம் /நியூஸ் /சென்னை /

தீபாவளி சிறப்புப் பேருந்து: கோயம்பேட்டில் கூடுதலாக 4 முன்பதிவு கவுன்டர்கள் திறப்பு...

தீபாவளி சிறப்புப் பேருந்து: கோயம்பேட்டில் கூடுதலாக 4 முன்பதிவு கவுன்டர்கள் திறப்பு...

சிறப்பு பேருந்துகள்

சிறப்பு பேருந்துகள்

Chennai | தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், கோயம்பேட்டில் கூடுதலாக 4 முன்பதிவு கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னையில் இருந்து புறப்படும் அரசு பேருந்துகளுக்கு முன்பதிவு நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வரும் திங்கள்கிழமை கொண்டாடப்படும் நிலையில், சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக, தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

  பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வெளியூர்களுக்கு வழக்கமாக இரண்டாயிரத்து 100 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், 3 நாட்களில் கூடுதலாக நான்காயிரம் பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று மாலையில் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  ' isDesktop="true" id="822794" youtubeid="gf5qCQKSr48" category="chennai">

  Also see... பூட்டிய வீட்டுக்குள் இறந்துகிடந்த கணவர், 2வது மனைவி... கொலையா, தற்கொலையா என குழம்பும் போலிஸார்!

  கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்கனவே 6 முன்பதிவு கவுன்டர்கள் செயல்பட்டு வரும் நிலையில் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 4 கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த கவுன்டர்களில் பயணிகள் முன்பதிவு செய்து வருகின்றனர்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Chennai, Diwali festival, Koyambedu, Special buses