ஹோம் /நியூஸ் /சென்னை /

தீபாவளி சிறப்பு பேருந்து: சென்னையில் எங்கிருந்து எல்லாம் இயக்கப்படுகிறது? முழு விவரம்

தீபாவளி சிறப்பு பேருந்து: சென்னையில் எங்கிருந்து எல்லாம் இயக்கப்படுகிறது? முழு விவரம்

சிறப்பு பேருந்துகள்

சிறப்பு பேருந்துகள்

Diwali Special Buses | தீபாவளி பண்டிகை வரும் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக 21.10.2022 முதல் 23.10.2022 வரை சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் பொதுமக்கள் சிரமமில்லாமல் பயணம் செய்யும் வகையில் போக்குவரத்து துறையால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த நாட்களில், சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், தீபாவளி பண்டிகை வரும் 24ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக வரும் 21.10.2022 முதல் 23.10.2022 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 

வெளியூர் செல்லும் பேருந்துகளின்  விவரம் :

 1.  தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம் - (திண்டிவனம் மார்க்கமாக) திருவண்ணாமலை, செஞ்சி, வந்தவாசி, சேத்துப்பட்டு, போளூர், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், நெய்வேலி, வடலூர், காட்டுமன்னார்கோயில்.

2.  தாம்பரம் சானிடேரியம் - கும்பகோணம், தஞ்சாவூர்.

3. கே.கே.நகர் பேருந்து நிலையம் -  (ECR மார்க்கமாக) புதுச்சேரி, கடலூர், சிதம்பரம்.

4. மாதவரம் பேருந்து நிலையம் -  (செங்குன்றம் மார்க்கமாக) காளஹஸ்தி, திருப்பதி, நெல்லூர், பொன்னேரி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி.

5.  பூந்தமல்லி பணிமனை - காஞ்சிபுரம், செய்யாறு, ஆற்காடு, ஆரணி, வேலூர், சித்தூர், குடியாத்தம், திருப்பத்தூர், ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி, திருப்பதி.

6. கோயம்பேடு பேருந்து நிலையம் - திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், திருக்கோவிலூர், திட்டக்குடி, திருச்சி, சேலம், மயிலாடுதுறை.

First published:

Tags: Chennai, Deepavali, Diwali, Special buses