ஹோம் /நியூஸ் /சென்னை /

தென் சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

தென் சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

South Chennai Rainwater Drainage Works மழைநீர் வடிகால் மற்றும் வெள்ள தடுப்பு பணிகளை துரிதப்படுத்தும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று பணிகளை ஆய்வு செய்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  மழைநீர் வடிகால் மற்றும் வெள்ள தடுப்பு பணிகளை துரிதப்படுத்தும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று பணிகளை ஆய்வு செய்தார்.

  கடந்த ஆண்டு பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகரில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். இதனை சரிசெய்யும் விதமாக, சென்னை முழுவதும், மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகள் நடந்து வருகின்றன.

  இன்னும் சில வாரங்களில் பருவமழை தொடங்கவிருக்கும் நிலையில் அதற்குள் பணிகளை முடிக்க வேண்டுமென அறிவுறுத்தபட்டுள்ளது.இந்நிலையில், தென் சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

  இதனைத்தொடர்ந்து செம்மஞ்சேரி டி.எல்.எப்., நூக்கம்பாளையம் பாலம், பெரும்பாக்கத்தில் நேதாஜி நகர் பிரதான சாலை, போன்ற இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இப்பகுதியில் முதலமைச்சர் இரண்டாவது முறையாக ஆய்வு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், தா.மோ. அன்பரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

  Published by:Karthi K
  First published:

  Tags: Chennai, CM MK Stalin