Home /News /chennai /

மனைவியை தன்னுடன் அனுப்ப மறுத்த மாமியாரை குத்திக்கொன்ற மருமகன் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

மனைவியை தன்னுடன் அனுப்ப மறுத்த மாமியாரை குத்திக்கொன்ற மருமகன் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

மாமியாரை குத்தி கொலை செய்த மருமகன்

மாமியாரை குத்தி கொலை செய்த மருமகன்

Chennai district News: சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தில், மனைவியை தன்னுடன் அனுப்பாத மாமியாரை மதுபோதையில் குத்தி கொலை செய்த எலக்ட்ரீஷியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    மடிப்பாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் 40-வயதான ஆறுமுகம். இவர், எலக்ட்ரீஷியனாக பரிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கீதா என்பவருக்கும் திருமணமாகி கடந்த 17 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    மது பழக்கத்திற்கு அடிமையான ஆறுமுகம் தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆறுமுகம் குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால், மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் கோபமடைந்த கீதா தனது குழந்தைகளுடன் மடிப்பாக்கம் காஞ்சி காமாட்சி நகரில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில், மது போதையில் இருந்த ஆறுமுகம் மாமியார் சித்ரா (63) வீட்டிற்கு சென்று தன்னுடன் மனைவியை தன்னுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு கூறியயுள்ளார்.

    அப்போது, கீதா வீட்டில் இல்லை என மாமியார் சித்ரா கூறியதால், ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் மாமியாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் ஒரு கட்டத்தில் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து சித்ரா கழுத்தில் குத்தியுள்ளார். அப்போது, வலியால் மாமியார் சத்தம் போட்டுள்ளார்.

    இதைக் கேட்டு வீட்டில் இருந்த மைத்தனர் உதயகுமார் (34) ஒடிவந்து, ஆறுமுகத்தை தடுக்க முயன்றுள்ளார். அப்போது அவரது வயிற்றிலும் கத்தியால் குத்தியுள்ளார். இந்த தகராறில் ஆறுமுகத்திற்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்ட நிலையில், மடிப்பாக்கம் காவல் நிலையம் சென்ற ஆறுமுகம் நடந்ததை கூறியுள்ளார்.

    பின்னர், ஆறுமுகத்தை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போலீசார் சிகிச்சை அளித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாமியார் சித்ரா, மைத்துனர் உதயகுமார் இருவரையும் கத்தியால் குத்தியதாக கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் கத்தி குத்துபட்ட மாமியார் சித்ரா உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து மடிப்பாக்கம் போலீசார் ஆறுமுகத்தின் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

    Must Read : காதலை சொன்ன இளைஞர்.. போலீசில் புகார் அளித்த பெண் வீட்டார் - மன உளைச்சலில் இளைஞர் தற்கொலை

    கோபத்தில் அம்மா வீட்டிற்கு வந்த மனைவியை தன்னுடன் அனுப்பாத மாமியாரிடம் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் - ப.வினோத்கண்ணன்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Chennai, Crime News, Murder

    அடுத்த செய்தி