Home /News /chennai /

சென்னையில் தாய், மகன் அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை.. சோக சம்பவத்தின் பின்னணி

சென்னையில் தாய், மகன் அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை.. சோக சம்பவத்தின் பின்னணி

தற்கொலை செய்து கொண்ட தாயும் மகனும்

தற்கொலை செய்து கொண்ட தாயும் மகனும்

Tiruvottiyur | தந்தை திட்டியதால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் இறந்த துக்கம் தாங்காமல் அடுத்த ஒருமணி நேரத்தில் தாயும் தற்கொலை செய்து கொண்டார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruvottiyur, India
    சென்னை வியாசர்பாடி கரிமேடு பகுதியை சேர்ந்தவர் ரகுநாதன். இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு இளவரசி என்ற மனைவியும்  சுசில் (21 ) என்ற மகனும் உள்ளனர். சுசில் பி காம் வரை படித்துவிட்டு கொடுங்கையூர் சேலை வாயில் பகுதியில் நடனப் பள்ளியில் டான்ஸ் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். சுசில் தினமும் நடன வகுப்பு முடித்து இரவு நேரங்களில் தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அவரது தந்தையான ரகுநாதன் கண்டித்துள்ளார்.

    இதனால் சுசில் மற்றும் அவர்து தந்தை ரகுநாதன் ஆகியோருக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் படுக்கையறைக்கு சென்று அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டார் சுசில். நீண்ட நேரம் ஆகியும் தனது அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது தாய் தனது மகன் அறைக்கு சென்று பார்த்தபோது தனது மகன் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து சுசிலை பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சுசிலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் . சிறிது நேரத்தில் இளவரசி நான் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு  வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு தனது மகன் அறைக்கு சென்று அதே மின்விசிறியில்தூக்கு மாட்டிக் கொண்டு இறந்துள்ளார்.

    சிறிது நேரத்தில் அவரது வீட்டிற்கு வந்த உறவினர்கள் இளவரசியும் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் எம் கே பி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற எம் கே பி நகர் போலீசார் இளவரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Also see... கேரளாவில் தெரு நாய் கடித்து 12 வயது சிறுமி உயிரிழப்பு

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே வீட்டில் மகன் தாய் என இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    செய்தியாளர்: அசோக்குமார், சென்னை
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Chennai, Commit suicide, Crime News

    அடுத்த செய்தி