மின்சார கட்டணம் செலுத்தவில்லை என வந்த குறுந்தகவல் மூலம் ரூ.8 லட்சத்தை நூதனமாக மோசடி செய்த கும்பல், சைபர் தனிப்படை போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பணம் மீட்கப்பட்டாலும், மோசடி நபர்களை கண்டறிய முடியவில்லை.
சென்னை முகப்பேரை சேர்ந்தவர் ரோமி பைநாடன் (52), இவரது மொபைல் போனுக்கு, நீங்கள் மின்சார கட்டணம் செலுத்தவில்லை என, குறுஞ்செய்தி வந்துள்ளது. இதையடுத்து, ரோமி தனக்கு குறுந்தகவல் வந்த எண்ணிற்கு அழைத்து பேசியுள்ளார். அப்போது, மின் வாரிய அதிகாரி போல பேசிய ஒருவர், பணம் செலுத்த உதவுவதாகக் கூறி, 'டீம் வியூவர்' செயலியை பதிவிறக்கம் செய்யும் படி கூறியுள்ளார்.
அவரது பேச்சை நம்பி, ரோமி பைநாடனும் அந்த நபர் கூறியபடி செய்து டீம் வியூவர் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். தொடர்ந்து,
ரோமி பைநாடன் கண்முன்பே, அவரது வங்கி விவரம் மற்றும் OTP எண் ஆகியவை பகிரப்பட்டு அவர் வங்கி கணக்கிலிருந்து ரூ.8,88,000 திருடப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த மோசடி குறித்து, கடந்த மாதம் 22ம் தேதி திருமங்கலம் போலீசில் ரோமி பைநாடன் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து, அவரது புகார் அண்ணா நகர் சைபர் கிரைமுக்கு மாற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டு, அவர் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணம் மீட்கப்பட்டது. எனினும், நூதன மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க முடியவில்லை. தொடர்ந்து, சைபர் கிரைம் போலீசார் மோசடி நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.