ஹோம் /நியூஸ் /சென்னை /

ஒரே பயணச்சீட்டில் பேருந்து, மெட்ரோ ரயில், லோக்கல் ட்ரெய்ன்? முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!

ஒரே பயணச்சீட்டில் பேருந்து, மெட்ரோ ரயில், லோக்கல் ட்ரெய்ன்? முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!

மெட்ரோ ரயில், புறநகர் ரயில், பேருந்து

மெட்ரோ ரயில், புறநகர் ரயில், பேருந்து

“பள்ளி மாணவ, மாணவியர் சிரமமின்றி சென்று வரும் வகையில், அவை காலையில் துவங்கி மாலையில் முடியும் நேரத்தை கருத்தில் கொண்டு செயல்படவேண்டும்” - மு.க.ஸ்டாலின்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  ஒரே பயணச்சீட்டில் மாநகர பேருந்துகள், சென்னை மெட்ரோ ரயில், புறநகர் ரயில்கள் அனைத்திலும் பயணிக்கும் வசதி குறித்து பெருநகர போக்குவரத்து குழுமக் கூட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது.

  இன்று சென்னை, நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமையகத்தில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் முதல் குழுமக் கூட்டம் நடைபெற்றது.  அதில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

  “சென்னை நகர போக்குவரத்து நெரிசல் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். பெருகிவரும் மக்கள் தொகைக்கும் நகர விரிவாக்கத்திற்கும் ஏற்ப நாம் போக்குவரத்து வசதிகளை திட்டமிட்டுப் பெருக்க வேண்டியுள்ளது. அதற்காக நாம் புதிய தொழில்நுட்பங்களை எந்த அளவிற்கு பயன்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும்.

  உலகத் தரம் வாய்ந்த போக்குவரத்து முறை நமது தலைநகரில் அமைய வேண்டும். பொதுப் போக்குவரத்து எந்த அளவிற்கு சிறப்பாக கட்டமைக்கப்படுகிறதோ அந்த அளவிற்கு சாலைகளில் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையும், போக்குவரத்து நெரிசலும் குறையும், சுற்றுச்சூழல் மாசுபடுவதும் அதே அளவுக்குக் குறையும். எனவே பொது முக்கியத்துவம் வாய்ந்த இந்த அமைப்பானது பணிகளை ஒருங்கிணைத்து, திட்டமிட்டு குறிப்பிட்ட கால வரம்பிற்குள் அவற்றை நிறைவேற்ற வேண்டும்.” என தெரிவித்தார்.

  சிறையிலிருந்து விடுதலையாகிறார் சவுக்கு சங்கர்.. 4 வழக்குகளிலும் ஜாமீன்.. நீதிமன்றம் உத்தரவு 

  மேலும், “பள்ளி மாணவ, மாணவியர் சிரமமின்றி சென்று வரும் வகையில், முக்கியமாக பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் அவை காலையில் துவங்கி மாலையில் முடியும் நேரத்தை கருத்தில் கொண்டு செயல்படவேண்டும்” என தெரிவித்தார்.

  இந்த கூட்டத்தில் ஒரே பயணச்சீட்டில் மாநகர பேருந்துகள், சென்னை மெட்ரோ ரயில், புறநகர் ரயில்கள் அனைத்திலும் பயணிக்கும் வசதி குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Chennai local Train, Metro Rail, MTC