ஹோம் /நியூஸ் /சென்னை /

சூடு பிடிக்கும் விவகாரம்.. ஆளுநரை திரும்பபெற மனு... திமுக கூட்டணி கட்சிகளுக்கு டி.ஆர்.பாலு கடிதம்..!

சூடு பிடிக்கும் விவகாரம்.. ஆளுநரை திரும்பபெற மனு... திமுக கூட்டணி கட்சிகளுக்கு டி.ஆர்.பாலு கடிதம்..!

டி.ஆர்.பாலு, ஆர்.என்.ரவி

டி.ஆர்.பாலு, ஆர்.என்.ரவி

TR Balu's letter | ஆளுநரை உடனடியாக திரும்ப பெறுமாறு குடியரசு தலைவரிடம் மனு அளிக்க திமுக தலைமை முடிவுசெய்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி, குடியரசு தலைவரிடம் மனு அளிக்க திமுக முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான மனுவில் கையெழுத்திட வருமாறு திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்களுக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் சில கருத்துக்களை கூறி வருகிறார். இந்த செயல்பாடுகளை திமுக கூட்டணி கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

    மேலும் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக பேசுவதாக இருந்தால், பதவியிலிருந்து ஆர்.என்.ரவி விலக வேண்டும் என்று திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, கே.எஸ்.அழகிரி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    இதையும் படிங்க : சென்னை வந்துவிட்டு ஸ்டாலினை சந்திக்காமல் போக முடியுமா? - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி கலகல பேட்டி

    அதில்,  சனாதனம், ஆரியம், திராவிடம், பட்டியலின மக்கள் மற்றும் திருக்குறள் குறித்து ஆளுநர் கூறும் கருத்துகள் அபத்தமானவையாகவும், ஆபத்தானவையாகவும் இருக்கின்றன என விமர்சிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு, பழமைவாத கருத்துகளை பேசுவது அவருக்கும், அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

    இந்நிலையில், ஆளுநரை உடனடியாக திரும்ப பெறுமாறு குடியரசு தலைவரிடம் மனு அளிக்க திமுக தலைமை முடிவுசெய்துள்ளது. இதுதொடர்பாக திமுக மற்றும் ஒத்த கருத்துடைய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு திமுக பொருளாளரும், கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆா்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.

    இதையும் படிங்க : நாளைக்கு ஸ்கூல் லீவா? மழை பெய்யுமா? மாணவர்களுக்கு ஷாக் தந்த வெதர்மேன்.!

    அதில், அண்ணா அறிவாலயத்துக்கு நாளைக்குள் வருகைதந்து, குடியரசு தலைவருக்கு அனுப்புவதற்கான மனுவை படித்து பார்த்து கையெழுத்திடுமாறு டி.ஆர்.பாலு கேட்டுக் கொண்டுள்ளார்.

    Published by:Karthi K
    First published:

    Tags: DMK, K.balakrishnan, KS Alagiri, RN Ravi, T.r.balu, Thol Thirumaavalavan, Vaiko