ஹோம் /நியூஸ் /சென்னை /

நிர்வாண மாடலிங்.. இன்ஸ்டாவில் பழக்கம்.. இளம்பெண்ணை ஆபாசமாக மார்ஃபிங் செய்த இயக்குநர்.!

நிர்வாண மாடலிங்.. இன்ஸ்டாவில் பழக்கம்.. இளம்பெண்ணை ஆபாசமாக மார்ஃபிங் செய்த இயக்குநர்.!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

இன்ஸ்டாகிராமில் அன்பிரண்ட் செய்ததால் கோபமடைந்த குறும்பட இயக்குநர் இளம்பெண்ணின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து பணம் கேட்ட மிரட்டியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னையைச் சேர்ந்த மாடலிங் துறையில் உள்ள இளம் பெண் ஒருவர் மாடலிங் துறையில் நல்ல வாய்ப்புக்காக தேடிக் கொண்டிருந்தபோது அவருக்கு வாட்ஸ் அப் எண்ணில் இருந்து ஒரு விளம்பரம் வந்திருக்கிறது. இங்கிலாந்து நாட்டிற்கு மாடலிங் தேவைப்படுவதாக கூறி அதில் தொடர்பு எண் தீக்ஷா ஜோதி என்பவருடைய பெயருடன் வந்துள்ளது.

இதனை தொடர்ந்து இளம் பெண் அந்த தீக்ஷா ஜோதியை தொடர்பு கொண்டு இருக்கிறார். அவர் கேட்ட புகைப்படங்களை எல்லாம் அனுப்பி இருக்கிறார் "போல்ட் மாடலிங் " என சொல்லக்கூடிய அரை நிர்வாண மற்றும் முழு நிர்வாண மாடலிங் தேவைப்படுவதாக கூறியதை நம்பிய இளம் பெண், அதனையும் புகைப்படமாக அனுப்பி இருக்கிறார்.

இதனை பெற்றுக் கொண்ட அந்த நபர் சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி மூன்று லட்ச ரூபாய் வரை பணம் கேட்டதாக இளம் பெண் சென்னை மாநகர காவல் துறையில் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போது வாட்ஸ் அப் எண்ணை வைத்து சோதனை செய்து திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கைதான ரஞ்சித்

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புகார் கொடுத்த இளம் பெண்ணுடன் ஏற்கனவே இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பில் இருந்ததாகவும் அப்போது கருத்து வேறுபாடு காரணமாக தன்னை அப்பெண் அன்ஃப்ரண்ட் செய்துவிட்டு சென்றுவிட்டார் எனவும் அவரை பழிவாங்கவே  புகைப்படங்களை மார்பிங் செய்ததாகவும் கூறியிருக்கிறார்.

Also see...கொரியர் செய்வதாக கூறி 8 லட்சம் பெண்ணிடம் மோசடி

சினிமா துறையில் இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு சென்னைக்கு வந்ததாகவும் ஒரு சில குறும்படங்களை ரஞ்சித் இயக்கியிருப்பதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும், whatsapp எண்ணிற்காக அவர் பயன்படுத்திய சிம் கார்டு சாலை ஓரத்தில் கிடந்த சிம்கார்டை எடுத்து பயன்படுத்தியதாகவும் விசாரணையில் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து  போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Chennai, Crime News, Instagram