முகப்பு /செய்தி /சென்னை / சுகர் பிரச்னை.. பெண்ணின் வயிற்றுக்குள் 2,000 கற்கள்.. மருத்துவர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்..!

சுகர் பிரச்னை.. பெண்ணின் வயிற்றுக்குள் 2,000 கற்கள்.. மருத்துவர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்..!

காட்சிப்படம்

காட்சிப்படம்

பெண்ணின் வயிற்றில் இருந்து சுமார் 2000 கற்களைச் சென்னையில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேற்குவங்கத்தைச் சேர்ந்த பெண்ணின் பித்தப்பையில் இருந்து 2,000 சிறிய கற்கள், சென்னை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்ட சம்பவம் மருத்துவ உலகையே திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.

55 வயது பெண்ணின் பித்தைப்பையில் இருந்து கடற்கரை மணலில் இருக்கும் சிறிதும் பெரிதுமான கற்கள்போல காட்சியளிக்கும் சுமார் 2000 கற்கள் எடுக்கப்பட்டுள்ளது. நீரிழிவு பாதிப்பு இருப்பதால் சரியாக உணவு உட்கொள்ள முடியவில்லை என்று சென்னை கோபாலபுரத்தில் உள்ள மோகன்ஸ் டயபெட்டிக் என்ற மருத்துவமனைக்கு வந்த அந்த பெண்ணின் பித்தப்பையை ஸ்கேன் செய்தபோது மருத்துவர்கள் அதிர்ந்து போய்விட்டார்கள். ஏனென்றால் உள்ளே 50 கற்கள் இருப்பதாக ஸ்கேன் காட்டியது.

பின்னர் அறுவை சிகிச்சை செய்துபார்த்தபோது சிறிதும் பெரிதுமாக என்று 2,000 கற்கள் இருந்தன. இதில் 2 சென்டிமீட்டர் அளவில் ஆயிரத்து 200 கற்கள் இருந்தன. 40 வயதுக்கு மேல் உடல்பருமன், நீரிழிவு நோயால் பெண்களுக்கு இந்த பாதிப்புக்கான வாய்ப்பு அதிகம் என்று கூறும் மருத்துவர்கள், குறிப்பிட்ட இந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் இருந்திருந்தால் பித்தப்பையே வெடித்திருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது போன்ற வயிற்றில் கற்கள் ஏற்படுவதற்குக் காரணம் என்ன?

மருத்துவர் பிரிஜேந்திர குமார் ஸ்ரீவத்சவ் (நீரிழிவு நோய் நிபுணர்) இது குறித்துக் கூறுகையில், பித்தப் பை என்பது கல்லீரலில் இருந்து வெளிவரும் பித்தத்தைச் சேகரித்து வைத்து, ஜீரணத்துக்குத் தேவையான போது அதை வெளியேற்ற வேண்டும். சிலருக்குப் பித்தப்பை முறையாகப் பித்தத்தை வெளியேற்றாது. அவர்களுக்குப் பித்தப்பையில் பித்தம் தேங்கி, தொற்று ஏற்பட்டு கற்கள் உருவாகலாம் என்று கூறியுள்ளார்.

Also Read : வாகன ஓட்டிகளே உஷார்.. இனி பார்க்கிங்கில் நின்றாலும் அபராதம் தேடிவரும்.. சென்னை போலீஸின் அதிரடி நடவடிக்கை!

மேலும் மருத்துவர். சதீஷ் பாபு (மயக்கவியல் மருத்துவர்) ஒன்றிரண்டு கற்கள் மட்டுமே இருந்தால் அஜீரணக் கோளாறு போன்ற லேசான அறிகுறிகள் மட்டுமே இருக்கும். பித்தப்பை வாய் அடைபடும் போது வலது பக்க விலா எலும்புக்குக் கீழ் வலி ஏற்பட ஆரம்பிக்கும் என்கிறார்.

சரியான நேரத்துக்குச் சாப்பிடுவதைத் தவிர்ப்போருக்கு இந்த பாதிப்பு அதிகம் வரும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

First published:

Tags: Empty stomach, Kidney Stone, Stomach Bloating, Stomach Pain