ஹோம் /நியூஸ் /Chennai /

மது அருந்தவைத்து துணை நடிகைக்கு பாலியல் தொல்லை: ஒளிப்பதிவாளர் கைது

மது அருந்தவைத்து துணை நடிகைக்கு பாலியல் தொல்லை: ஒளிப்பதிவாளர் கைது

ஒளிப்பதிவாளர் கைது

ஒளிப்பதிவாளர் கைது

Sexual Harassment : துணை நடிகைக்கு தொலைக்காட்சி தொடரில் கதாநாயகி வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்த ஒளிப்பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சென்னையில் கதாநாயகியாக வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி துணை நடிகையை வீட்டிற்கு அழைத்து  மது குடிக்க வைத்து, பாலியல் தொல்லை  கொடுத்த ஒளிப்பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  கொளத்துாரை சேர்ந்த 22 வயது பெண் சின்னத்திரையில்  துணை நடிகையாக நடித்து வருகிறார். இதன் மூலமாக சின்னத்திரையில் ஒளிப்பதிவாளராக வேலை செய்து வரும் வளசரவாக்கம், ஓம் சக்தி நகர் பிரதான சாலையை சேர்ந்த காசிநாதன்( 42) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

  இந்நிலையில், தொலைக்காட்சி தொடரில் கதாநாயகி வாய்ப்பு வாங்கி தருவதாகவும், அதை பற்றி பேச வேண்டும் என்றும் கூறி அந்தப் பெண்ணை காசிநாதன் தனது வீட்டிற்கு இரவு நேரத்தில் அழைத்துள்ளார். அவரது வீட்டில் வைத்து இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதையடுத்து அந்த பெண்ணுக்கு காசிநாதன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்பெண் தனது நண்பரை தொடர்பு கொண்டு, தன்னிடம் காசிநாதன் தவறாக நடந்துக்கொள்வதாகவும், தான் இருக்கும் இடம் குறித்தும் தெரிவித்துள்ளார்.

  Must Read : காவல்துறையினர் மோதியதில் எலும்பு முறிவு: ப.சிதம்பரம் தகவல்

  இதையடுத்து அங்கு சென்ற அவரது நண்பர், அந்தப் பெண்ணை மீட்டுள்ளார். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில், வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் காசிநாதனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

  செய்தியாளர் - சோமசுந்தரம்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Actress, Chennai, Sexual harassment