வருவாய்த்துறை அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் மீதான ஏழு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்தும், ஜல்லிக்கட்டு ஆதரவாகவும், விவசாயகளுக்கு ஆதரவாகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் மற்றும் மின் கட்டண உயர்வு கணடித்தும் போரட்டங்கள் நடத்தியதாக அமைச்சர் KKSSR ராமச்சந்திரனுக்கு விருதுநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
Also Read : ஆ.ராசா பேசியது ஸ்டாலின் குடும்பத்திற்கும் பொருந்துமா? மக்கள் கேள்வி என இபிஎஸ் விமர்சனம்
இதனை ரத்து செய்யக்கோரி KKSSR ராமச்சந்திரன் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்குகள் இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது, ஏழு வழக்குகளில் இரு வழக்குகளை அரசே திரும்ப பெற்று அரசாணை பிறப்பித்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai High court, Court Case, Minister