ஹோம் /நியூஸ் /சென்னை /

வீட்டுக்கு வந்தா சீரியல் வாய்ப்பு.. இளம்பெண்ணை வன்கொடுமை செய்ய முயன்ற கேமராமேன்!

வீட்டுக்கு வந்தா சீரியல் வாய்ப்பு.. இளம்பெண்ணை வன்கொடுமை செய்ய முயன்ற கேமராமேன்!

கோப்பு படம்

கோப்பு படம்

ஜூன் மாதம் நடந்த இந்த சம்பவத்தில் வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த இளம் பெண் அப்போதே புகார் அளித்திருந்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சீரியல் நடிகைக்கு நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தனது நண்பருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர் கைது.

  சீரியல் படங்களுக்கு கேமரா மேனாக பணிபுரிந்து வருபவர் காசிநாதன்(42). இவர் மற்றும் இவரது நண்பரான பரமதாஸ் ஆகியோர் நடிக்க ஒத்திகை பார்க்க வேண்டும் என 22 வயது இளம் பெண்ணை வீட்டுக்கு அழைத்துள்ளனர்.

  அதை நம்பி அந்த பெண்ணும் வீட்டிற்கு வந்த நிலையில், மது போதையில் இருவரும் அப்பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். உடனடியான அந்த இடத்தை விட்டு அப்பெண் வெளியேறினார்.

  கடந்த ஜூன் மாதம் நடந்த இந்த சம்பவத்தில் வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த இளம் பெண் அப்போதே புகார் அளித்திருந்தார்.

  தன் காதலியுடன் நெருக்கம் காட்டிய ‘ப்ளே பாய்’ நண்பன்...  ஆத்திரத்தில் ஆணுறுப்பை வெட்டி வாயில் திணித்த இளைஞர்! (news18.com)

  இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த காசிநாதன் முன்னரே வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது காசிநாதனின் நண்பர் பரமதாஸ் என்பவரையும் வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Crime News, Rape threat, TV Serial