ஹோம் /நியூஸ் /சென்னை /

தங்கத்தை ஸ்பிரிங் போல் சூட்கேஸில் மறைத்து கடத்தல்.. சென்னையில் சிக்கிய ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம்

தங்கத்தை ஸ்பிரிங் போல் சூட்கேஸில் மறைத்து கடத்தல்.. சென்னையில் சிக்கிய ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம்

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

Gold Seized | சென்னை விமான நிலையத்தில் சுமார் 1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  ஓமன் தலைநகா் மஸ்கட்டில் இருந்து ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்  சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த இரண்டு ஆண் பயணிகள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து அவர்களை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

  இருவரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் இருவரின் உடைமைகளை முழுமையாக சோதனை செய்தனர். அதில் எதுவும் சிக்கவில்லை இருப்பினும் இருவர் மீது சந்தேகம் இருந்ததால் அவர்கள் கொண்டு வந்திருந்த டிராலி டைப் சூட்கேஸ்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

  இதையடுத்து இரண்டு பேருடைய சூட்கேஸ்களையும் ஆய்வு செய்தனர்.  அந்த சூட்கேஸ்களை சுற்றி, அமைக்கப்பட்டுள்ள ரப்பர் பீடிங்கை பிரித்து பார்த்த போது அதற்குள் தங்க ஸ்ப்ரிங்குகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

  இதையும் படிங்க : போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டுகள் சிறை... நீதிமன்றம் தீர்ப்பு...

   இரண்டு பேருடைய சூட்கேஸ்களிலும் இருந்து மொத்தம் மூன்று கிலோ தங்க ஸ்ப்ரிங்குகளை சுங்க அதிகாரிகள் கண்டுப்பிடித்து எடுத்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 1.33 கோடி.  இதையடுத்து சுங்க அதிகாரிகள் சென்னை பயணிகள் இருவரையும் கைது செய்தனர்.அதோடு தங்க ஸ்ப்ரிங்குகளையும் பறிமுதல் செய்தனர்.

  தொடர்ந்து இரண்டு பயணிகளிடமும் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் இந்த தங்க ஸ்ப்ரிங்குகளை யாருக்காக கடத்தி வருகின்றனர். இவர்களை கடத்தலுக்கு அனுப்பியவா்கள் யார்? இவர்களுக்கும் சர்வதேச கடத்தல் தங்கம் கடத்தும் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  செய்தியாளர் : சுரேஷ் - சென்னை

  Published by:Karthi K
  First published:

  Tags: Chennai, Crime News