ஹோம் /நியூஸ் /சென்னை /

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுப்பு - சீமான் வரவேற்பு

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுப்பு - சீமான் வரவேற்பு

சீமான்

சீமான்

Refusal-Rss-Rally-Seeman-Welcome | ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வரவேற்பளித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வரவேற்பளித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: மக்கள் மனதில் மதவெறியை தூண்டி, தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற திட்டமிட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள தமிழ்நாடு அரசின் முடிவை வரவேற்கின்றேன். சரியான நேரத்தில் மிகச்சரியாக முடிவெடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கும்,காவல்துறை அதிகாரிகளுக்கும் வாழ்த்துகளும், நன்றியும்!

இதே நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கான தடையை நீதிமன்றத்திலும் உறுதிசெய்ய, வலிமையான சட்டப்போராட்டம் செய்ய  வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள முடிவுக்கு ஆதரவாக தமிழக அரசுக்குத் துணையாக நிற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக,  மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ். சார்பாக அணிவகுப்பு ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் என தெரிவித்து இந்த அணிவகுப்புக்கு அனுமதி மறுப்பதாக தமிழக காவல்துறை அறிவித்தது.

Published by:Karthi K
First published:

Tags: Chennai, RSS, Seeman