ஹோம் /நியூஸ் /சென்னை /

விசிகவின் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்பேன் - சீமான்..!

விசிகவின் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்பேன் - சீமான்..!

சீமான் - திருமாவளவன்

சீமான் - திருமாவளவன்

ஆசிரிய பெருமக்களை, உயிர்காக்கும் மருத்துவர்களை சாலையில் நிறுத்தி போராட வைக்காதீர்கள்- சீமான்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai | Chennai [Madras] | Tamil Nadu

சென்னையில் ஊதிய உயர்வு கோரி நடைபெற்ற அரசு மருத்துவர்களுக்கான போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார்.

அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு வேண்டி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே  போராட்டம் நடத்தினர். அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு சார்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் அக்குழுவின் தலைவர் பெருமாள் பிள்ளை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆம் ஆத்மி கட்சி வசீகரன், சமூக சமத்துவக்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலையிட்டு இப்பிரச்சனையில் எளிய தீர்வு காண வேண்டும் என்றும், ஆசிரிய பெருமக்களை, உயிர்காக்கும் மருத்துவர்களை சாலையில் நிறுத்தி போராட வைக்காதீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

ALSO READ | தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

மேலும், பாப்புலர் ப்ரண்ட் ஆப் மீதான தடையை நீக்க வேண்டும்; அது ஜனநாயக கட்சி என்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கம்தான் தடை செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். அக்டோபர் 2ஆம் தேதி விசிக நடத்தும் மனிதசங்கிலி பேரணியை ஆதரிக்கிறேன் என தெரிவித்த அவர் தானும் அதில், பங்கேற்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Published by:Anupriyam K
First published:

Tags: Naam Tamilar katchi, Seeman, Thol Thirumaavalavan, VCK