ஹோம் /நியூஸ் /சென்னை /

ரூ.30,000க்கு ஆக்டிவா.. இளம்பெண்ணுக்கு ஆசைக்காட்டி மோசடி - அதிர வைக்கும் சைபர் க்ரைம்

ரூ.30,000க்கு ஆக்டிவா.. இளம்பெண்ணுக்கு ஆசைக்காட்டி மோசடி - அதிர வைக்கும் சைபர் க்ரைம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Chennai Crime News: இந்திய ராணுவத்தில் பணியாற்றுவதாக கூறி தன்னுடைய வாகனம் விற்பனைக்கு உள்ளது என்று சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தி சென்னையை சேர்ந்த இளம்பெண்ணிடம் 41,500 மோசடி

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பழைய இருசக்கர வாகனத்தை வாங்குவதற்காக OLX தளத்தில் ஆராய்ந்து கொண்டிருந்துள்ளார். அப்போது 2019 மாடல் ஹோண்டா ஆக்டிவா வாகனம் ரூ30,000 -க்கு விற்பனை என விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் தொடர்பு கொள்ள எண்களும் கொடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இளம்பெண் அந்த எண்ணை தொடர்புக்கொண்டுள்ளார்.

செல்போனில் பேசிய நபர் தான் பல்லாவரம் மிலிட்டரி கேம்பில் இருப்பதாகவும் தனக்கு டிரான்ஸ்ஃபர் வந்துள்ளதால் பைக்கை விற்பனை செய்வதாக கூறியுள்ளார். மேலும் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பும்படி கூறியுள்ளார். இதனையடுத்து இளம்பெண் வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்துள்ளார்.

வாட்ஸ் அப்பில் பேரம்:  

வாட்ஸ் அப்பில் வாகனத்துக்கு விலை பேசியுள்ளார். ரூ. 30,000 பைனல் செய்துள்ளனர். இதனையடுத்து முன்பணமாக ரூ.3,000 ஜிபேவில் அனுப்பும்படி கோரியுள்ளார். மேலும் அவரது அடையாள அட்டையை அனுப்பும்படி கூறியுள்ளார். இளம்பெண்ணும் அடையாள அட்டையை அனுப்பியுள்ளார். அந்த நபர் அதை வைத்து ஒரு கேட்பாஸ் கடிதத்தை தயாரித்து அதை இவர்களுக்கு அனுப்பி விலாசம் மற்றும் வாகனம் அனுப்பும் முறை சரியாக உள்ளதாக கூறி கடிதத்தை இவரது வட்சாப்பில் அனுப்பியுள்ளார்.

அதைபடித்த இளம்பெண் அவர் உண்மையாகவே ராணுவத்தில் பணியாற்றி வருகிறார் என்று நம்பி தொடர்ந்து அவர் கேட்ட ரூ.3000 முதலில் அனுப்பியுள்ளனர். அதன் பின்னர் கேட் பாஸ் போட ரூபாய் 7,500 அனுப்பும்படி கூறியுள்ளார். அதன்படி ரூபாய் 7,500 அனுப்பியுள்ளனர். பின்னர் செல்போனில் தொடர்பு கொண்ட நபர் நீங்கள் தவறாக பணத்தை அனுப்பி உள்ளீர்கள். 7000 ரூபாய் தனியே 500 தனியே அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.

இறுதியில் முன்னதாக அனுப்பிய 7,500 பணத்தை கழித்துக்கொல்வதாக கூறி உடனே தனி தனியே 7000, 500 என இருமுறை அனுப்ப சொல்லியுள்ளார். அதன்படி மீண்டும் 7,500 பணத்தை அனுப்பியுள்ளனர். எல்லாம் முடிந்தது வாகனத்தை எப்போ அனுப்புவீர்கள் என்று கேட்டதற்கு வாகனத்தை பேக்கிங் செய்து வைத்துள்ள ஒரு படத்தையும் வீடியோவையும் இவர்களுக்கு அனுப்பி வாகனம் தயாராக உள்ளது என்பதை நம்பவைத்துள்ளார்.

இதையும் படிங்க : ஷேர் ஷாட்டில் பழக்கம்.. தனிமையில் உல்லாசம் - காதலித்து ஏமாற்றிய ராணுவ வீரரின் திருமணத்தை நிறுத்திய காதலி

அதை தொடர்ந்து ஜி.எஸ்.டி. கட்ட வேண்டும் என கூறி ரூபாய் 5100 அனுப்பினால் மட்டுமே வாகனத்தை அனுப்ப முடியும் என்று கூறியதை தொடர்ந்து வேறு வழி இல்லாமல் 5100 ரூபாய் பணத்தை வேறு ஒருவர் மூலம் அனுப்பியுள்ளார். மேலும் இங்கிருந்து வாகனம் வெளியே வரவேண்டும் என்றால் டிரான்ஸ்போர்ட் இன்சூரன்ஸ் என கூறி ரூபாய் 11,500 அனுப்ப வேண்டும் அந்த பணம் பணத்தை வாகனத்தை வீட்டில் விடும்போது திருப்பி தரப்படும் என்று கூறியுள்ளார்.

என்னிடம் பணம் இல்லை என இளம்பெண் கூறியதும் யாரிடமாவது வாங்கி அனுப்புங்கள் என்று கூறியதை தொடர்ந்து 11,500  வேறு ஒருவர் வங்கி கணக்கில் இருந்து அனுப்பிவிட்டு வாகனம் எப்பொழுது வரும் என்று கேட்டுள்ளனர். அதற்கு ரூபாய் 8100 டெலிவரி சார்ஜ் அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.

அம்பலத்துக்கு வந்த மோசடி :

இதைத்தொடர்ந்து இந்தி தெரிந்த பெண் ஒருவர் இளம்பெண்ணின் செல்போனில் இருந்து அந்த நபரிடம் பேசியபோது தரைகுறைவான வார்த்தைகளில் பேசுவதாகவும் சற்றும் மரியாதை இல்லாமல் அந்த நபர் பேசியதால் இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்ற வாய்ப்பு இல்லை மோசடி நம்பர் போன்று தெரிகிறது என கூறி அந்த பெண்மணி எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் மேலும் ரூபாய் 8100 டெலிவரி சார்ஜ் அனுப்ப வேண்டும் என்று கூறியதை தொடர்ந்து (G-Pay) ஜி.பே.வில் 20 முறைக்கு மேல் பணம் பரிவர்த்தனை செய்ததால் தொடர்ந்து பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனைதொடர்ந்து அந்த மோசடி நபரிடம் பாதிக்கப்பட்ட பெண் பணம் அனுப்ப முடியவில்லை என்று கூறியுள்ளார்.

மோசடியாளர் எச்சரித்த போன் -பே :

அந்தநபர் Phonepe-வில் பணம் அனுப்புங்க என்று கூறி QR Code ம் அனுப்பியுள்ளார். வேறு வழி இல்லாமல் மோசடி நபர் கேட்ட பணத்தை அனுப்பிவிட்டு வாகனத்தை பெற்றுவிடலாம் என்று பணம் அனுப்ப முயற்சித்துள்ளார். அப்போது மோசடியாளர் என்பதன் கீழ் இவர் அடையாளப்படுத்தப்பட்டு இருக்கலாம். மீண்டும் ஒருமுறை சரிபாருங்கள் அல்லது இந்த பேமெண்ட்டை ரத்து செய்யுங்கள் என்று ஒரு குறுஞ்செய்தி போன்-பேவில் வந்துள்ளது.

இதையும் படிங்க:  கத்தி முனையில் கணவன் மனைவியை கடத்தி சென்ற கும்பல்.. போலீசாரையே மிரட்டி தப்பியோட்டம்!

அதைத்தொடர்ந்து சற்று சுதாரித்துக்கொண்ட பாதிக்கப்பட்ட பெண் தொடர்ந்து பணம் பறிக்கும் நோக்கத்தில் பல்வேறு கட்டணம் எனக்கூறி பணத்தை மட்டும் பெற்றுக்கொண்ட அந்த மோசடி நபர் மீது சந்தேகம் வந்ததுள்ளது. அவரது செல்போனை தொடர்புகொண்டு பேசியபோது எனக்கு வாகன வேண்டாம் நான் அனுப்பிய பணத்தை திருப்பி கொடுங்கள் என்று பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

அதற்கு நீ யார் என்று கேள்வியை எழுப்பி பணமும் கிடையாது வண்டியும் கிடையாது என்று கூறி போனை துண்டித்துள்ளார்.

இந்த மோசடி சம்பவம் மாலை 6 மணி முதல் இரவு 10 மணிக்குள் நடைபெற்றுள்ளது. தான் பாதிக்கப்பட்டதுபோல் வேறு யாரும் இதுபோன்ற இந்திய இராணுவம் என்று கூறி அனைத்து அடையாள அட்டைகளையும் அனுப்பி எதேனும் விற்பனைக்கு உள்ளது என்று சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தினால் நம்பி ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரை பெற்ற நீலாங்கரை போலீசார் மோசடி சம்பவம் என்பதால் அடையார் சைபர் க்ரைம் போலீசாருக்கு இந்த வழக்கை மாற்றியுள்ளனர்.

“இந்திய ராணுவத்தில் பணியாற்றுவதாகவும் தன்னுடைய பணி மாறுதல் காரணமாக தான் பயன்படுத்தி வந்த வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் வாகனங்களை விற்பனை செய்வதாக சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தி வந்துள்ளார். அதில் தன்னுடைய செல்போன் என்னை பதிவு செய்து அதில் தொடர்பு கொள்பவர்களை குறைந்த விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதாக ஆசைய வார்த்தை கூறிவந்துள்ளார். அவர்கள் நம்பும் வகையில் இந்திய ராணுவத்தில் பணியாற்றும் அடையாள அட்டை ஆதார் அட்டை உள்ளிட்டவர்களை அனுப்பி நூதன முறையில் பல்வேறு நபர்களிடம் மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

செய்தியாளர்: ப.வினோத் கண்ணன்

First published:

Tags: Cheating, Chennai, Cyber crime, Online Frauds, Tamil News